தை பூசம் என்றால் நினைவுக்கு வருவது முருகன் அடுத்தது. அருட்பிரகாச வள்ளலார் என்கிற ராமலிங்க அடிகளார். வள்ளலார் தெய்வ நிலையம், சத்திய ஞானசபை வடலூரில் அமைந்துள்ளது. இங்கு தைப்பூசம் ஜோதி தரிசனம் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் கண்பர். இதேபோல் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
இந்த நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இப்போது உள்ள திமுக தனது தேர்தல் அறிக்கையில் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி திமுக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்
தொடர்ந்து பூர்வாங்க பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடலூர் பெருவெளியில் சர்வதேச மையம் அமைப்பதற்கு அரசியல் கட்சியினர், சன்மார்க்க நண்பர்கள் மற்றும் பார்வதிபுரம் பொதுமக்கள் என பலர் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தினர்.எங்கள் மூதாதையர்களான பார்வதிபுர கிராம மக்கள் தானமாக கொடுக்கப்பட்ட இடமான பெருவெளியில் எந்த கட்டிடமும் கட்டக் கூடாது, பெருவெளி பெருவெளியாகத்தான் இருக்க வேண்டும், 1867-ம் ஆண்டு முதல் 157 வருட காலமாக இதுவரையில் பெருவெளியாக இருந்த இடத்தை கட்டிடங்கள் கட்டி சிறுவெளியாக ஆக்காதீர்கள் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தார்கள். இந்த எதிர்ப்புகளை மீறி தமிழக அரசு கட்டுமான பணியை தொடங்கியது.
வள்ளலார் பெருவெளி நிலத்தை அரசு ஆக்கிரமித்து வசூல் வேட்டையில் இறங்க நினைத்தது திமுக அரசு. வள்ளலார் பெருவெளி பகுதியை சுற்றுலா தலம் போல் ஆக்கிவிட்டால் வள்ளலாரின் பெருமைகளை ஒரு காட்சி பொருளாக மட்டுமே பார்க்கமுடியும். அவரின் தெய்வீகத்தை உணர முடியாது
அழித்து விடலாம் என நினைக்கிறது திமுக அரசு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார்கள்.பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து நாடாளுமன்றம் தேர்தல் வரை எந்தவித வேலையையும் செய்யவில்லை. தேர்தல் முடிந்த கையோடு மீண்டும் வேலைகளை ஆரம்பித்தது திமுக அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிமன்றம், Site-A, Site-B என இரண்டாக பிரித்து Site-B பகுதியில் கட்டுமான பணிகளை தொடர தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் வினோத் ராகவேந்திரன் . இந்த மேல்முறையீட்டு மனுவில், ஆன்மீக மையத்தை வணிக மயமாக்க முடியாது. அது ஏழைகளின் முன்னேறத்துக்கான இடம். வள்ளலார் கோவிலில் சர்வதேச மையம் கட்டுவது வள்ளலாரின் விருப்பத்துக்கு எதிரானது என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வள்ளலார் சர்வதேச மையத்தை கட்டுவது சட்டவிரோதம் என்றும் வள்ளலார் விருப்பத்துக்கு எதிரானது எனவும் வாதிட்டார். இதனைப் பதிவு செய்துகொண்ட உச்ச நீதிமன்றம் வள்ளலார் சர்வதேச மையத்தின் புதிய கட்டுமானங்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை தற்போதையே நிலையே தொடர வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. மேலும், இது தொடர்பாக தமிழக அரசுக்கும் நோட்டீஸ் பிறப்பித்து, வழக்கை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த தீர்ப்பு தமிழ்க அரசுக்கு இடியை இறக்கியுள்ளது. இது போல் இந்து கோவில் நிலங்கள் குறித்தும் உச்சநீதிமன்றத்தை நாட உள்ளது இந்து அமைப்புகள் இதுவும் ஸ்டாலின் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.