தமிழக சட்டபேரவையின் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர். அப்போது பேரவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் துணை கேள்வி கேட்க, சபாநாயகர் அனுமதி அளிப்பார்.
நேற்றைய சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் யாரும் எதிர்ப்பார்க்காத பஞ்சமி நிலம் குறித்து கேள்விகளை முன் வைத்தார். அவர் பேசியதாவது:
ஆதிதிராவிட மக்களுக்கு கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.. 1991 முதல் பல்வேறு உயர் நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் பஞ்சமி நிலங்களை மீட்டு ஆதிதிராவிடர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியுள்ளன.
பஞ்சமி நிலங்களை கண்டறிவதற்காக ஓய்வு வெற்ற நீதியரசர் திரு.மருதமுத்து தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆனால், அந்த குழுவினுடைய அறிக்கை இன்று வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படவில்லை.
2015-ல் சென்னை உயர் நீதிமன்றமே ஒரு குழுவை அமைத்து உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ள பஞ்சமி நிலங்கள் குறித்து ஆராய உத்தரவிட்டிருந்தது. கூடுதல் தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த குழு தயாரிக்கப்பட்ட இன்று வரை வெளியிடப்படவில்லை.
வருவாய் துறை மானியக் கோரிக்கையில் பஞ்சமி நிலங்கள் பற்றி எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது,அரசாணை மூலமாக பஞ்சமி நிலங்களை மீண்டும் ஆதிதிராவிடர்களிடம் ஒப்படைக்க முடியாது.
எனவே, பஞ்சமி நிலங்களை மீட்டு மீண்டும் ஆதிதிராவிடர் மக்களுக்கே சென்று சேரும் வகையில் கர்நாடகம், மகாராஷ்டிரம் போல தனி சட்டத்தை தமிழகம் இயற்ற வேண்டும். என பேசினார்
பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்துள்ள முரசொலி அலுவலகக் கட்டட விவகாரம், தி.மு.க-வின் பல தில்லுமுல்லுகளை வெளிக் கொண்டு வந்துள்ளது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள், கொடுத்து வருகிறார்.
மூலபத்திரம் விவகாரம் திமுகவிற்கு தலைவலியாக அமைந்தது என்பது உண்மை. தேர்தல் நேரத்தில் மூலபத்திரம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் சரியாக பயன்படுத்தவிலை அது ஏன் என்றும் தெரியவில்லை.
தற்போது பாஜக சட்டப்பேரவையில் பஞ்சமி நிலம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சமி நிலம் மீட்கப்பட்டால் முதலில் முரசொலி நிலத்தினை தான் மீட்டெடுக்க வேண்டும். என்ற பேச்சுக்கள் அடிபட தொடங்கிவிட்டது.
பஞ்சமி நிலம் குறித்து சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய வானதி சீனிவாசன்! மீண்டும் முரசொலி மூலபத்திரத்தை கையில் எடுக்கிறதா பா.ஜ.க! என்ற பேச்சும் எழுந்துள்ளது.