தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. மேலும் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தான் தமிழகம் தற்போது மூழ்கி உள்ளது.என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அவரது முகநூல் பக்கத்தில் நீச்சல் தெரியாது போடா என்ற டீ ஷர்டை பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
மழை வெள்ளம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
சென்னையில் நிலவும் பெருவெள்ளத்தை கையாள்வதில் இருக்கும் அரசின் மெத்தன நடவடிக்கைகளுக்கு எதிராக “ நீச்சல் தெரியாது போடா” என்ற வாசகம் தாங்கிய டீ சர்ட்கள் பெருமளவில் மக்களால் விரும்பி அணியப்படுகிறது. என்றும் மேலும் சென்னையில் நிலவும் பெருவெள்ளத்தை கையாள்வதில் இருக்கும் அரசின் மெத்தன நடவடிக்கைகளுக்கு எதிராக “ நீச்சல் தெரியாது போடா” என்ற வாசகம் தாங்கிய டீ சர்ட்கள் பெருமளவில் மக்களால் விரும்பி அணியப்படுகிறது.
சென்னையில் வெள்ள நீருடன் சாக்கடை நீரும் கலந்து கடும் துர்நாற்றத்தோடு வீடுகளை சூழ்ந்திருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் 4 முறைக்கு மேல் இதே போன்று நிலை வந்திருக்கிறது. ஆனாலும் முறையான வெள்ள நீர் வெளியேற்றம், கழிவகற்ற முறைகளில் எந்த தொழில் நுட்ப முன் முயற்சியோ, பொறியியல் கட்டுமானங்களோ ஏற்படுத்தப்பட வில்லை. குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை நீரும் வெள்ள நீரும் கலந்து நோய் பரப்பி வருகின்றன.
நகரின் முக்கியமான நீர்த்தடங்கள், ஏரிகள், வாய்க்கால்கள், குளங்கள் , நீர் வடித்தடங்கள், சதுப்பு பகுதிகள் , வெள்ள வடினீர் கால்வாய்கள் உள்ளிட்ட அனைத்து நீர்பாசன கட்டமைப்புகளையும் குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் என்று தொடர்ந்து ஆட்சியில் இருந்த திராவிட இயக்கங்கள் ஆக்ரமித்துக்கொண்டதன் பின் விளைவே இன்றைய சிக்கலுக்கு முக்கிய காரணம்.
வெள்ள நீர் வடிவதற்கும் சாக்கடை நீர் வெளியேற்றத்திற்கும் முறையான நடவடிக்கைகளை ஆளும் திமுக அரசு உடனடியாக செய்ய வேண்டும். அதோடு நீர் மூலம் பரவும் நோய் தொற்றையும் சரி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துர்நாற்றத்திலும், நோய் பரவல் அச்சத்திலும் அவதியுறும் மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.