தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில், பா.ஜ.க சார்பில் வானதி சீனிவாசன் பேசினார். உரையை துவக்குவதற்கு முன் ”நான் பேசுகையில், அமைச்சர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலோ, ஏதேனும் விஷயத்தில் விளக்கம் தேவைப்பட்டாலோ, நான் பேசி முடித்த பின் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்,” என, சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, ”சட்டசபை மரபுப்படி, தேவைப்படும் நேரங்களில், தேவையான விளக்கங்களை அமைச்சர்கள் தருவர்,” என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய வானதி சீனிவாசன், ”எத்தனையோ,ஊடக விவாதங்களில், நானும் நீங்களும் பங்கேற்றுள்ளோம். அதில், எத்தனையோ முறை நான் குறுக்கிட்டு பேசி உள்ளேன். அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்,” எனக் கூற, சபையில் சிரிப்பலை எழுந்தது.
அதற்கு பதில் அளித்த சபாநாயகர், ”உங்கள் மீது கண்ணியமான எண்ணம் உண்டு. நான் உங்களை கண்ணியமாக பார்க்கிறேன். உங்களுக்கு உரிய மரியாதையை சபை தரும். நீங்கள் பேசுவதை பொறுத்து, அமைச்சர்கள் பதில் தருவர்,” என்றார்.
விவாதம் :
பா.ஜ.க – வானதி சீனிவாசன்: சமீப காலமாக மத்திய அரசை, ‘ஒன்றிய அரசு’ என அழைக்கிறீர்கள். ரோஜாவை எந்த பெயரில் அழைத்தாலும் அதன் வாசனையை மாற்ற முடியாது.
அமைச்சர் தியாகராஜன்: ரோஜாப்பூ மல்லிகையாகும் என நாங்கள் கூறவில்லை. மத்திய அரசின் வரி மற்றும் ஏனைய அதிகாரத்தை எதிர்த்து பேசிய முதல் நபர், நரேந்திர மோடி. அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது, ‘ஜி.எஸ்.டி., வரி, மாநில உரிமையை பறிக்கும்’ என்றார்.
எங்கள் கொள்கை, ஒரே கொள்கை தான். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஒரே கொள்கை தான்; அது மாறாது. பலருக்கு அப்படி இல்லை.
வானதி சீனிவாசன்: மத்திய அரசின் வரி விகிதத்தை தாண்டி, மாநில அரசு அதிக நிதி பெற்றுள்ளது. 2010ல் தமிழகத்துக்கு 928.3 கோடி ரூபாய் கிடைத்தது. 2021ல் 10 ஆயிரத்து 389 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமைச்சர் தியாகராஜன்: ரூபாய் மதிப்பை ஒப்பிட்டு பேசக் கூடாது. ஏனெனில் பண மதிப்பு மாறிக் கொண்டே இருக்கும். எனவே, சதவீதம் அடிப்படையில் பேசுங்கள்; ஒப்பிட்டு பார்க்க சரியாக இருக்கும்.இவர், கோவை தெற்கு எம்.எல்.ஏ.,வாக வந்துள்ளாரா அல்லது அரசியல் கட்சி பாதுகாவலராக வந்துள்ளாரா அல்லது மத்திய அரசின் பிரதிநிதியாக வந்துள்ளாரா? தொகுதி குறித்து பேசாமல், மத்திய அரசை பாதுகாப்பது குறித்து பேசுகிறார்.
வானதி சீனிவாசன்: கற்றுக் கொண்டதை கற்றுக் கொடுப்பதற்கு, சட்டசபை ஒன்றும் வகுப்பறை அல்ல. தன்னுடைய கண்டுபிடிப்புகளை நிறுவ, இது அறிவியல் ஆய்வகமும் அல்ல. கடந்த ஆண்டுகளில், எந்தெந்த வழிகளில் எந்தெந்த திட்டங்கள் வழியே, தமிழகத்துக்கு நிதியுதவி வந்தது என்ற தகவலை அளிக்கிறேன். சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதி ஏற்படுத்துவதற்காக, 3,500 கிலோ மீட்டர் துார சாலைகளுக்கு, 1.03 லட்சம் கோடி ரூபாய் வழங்கி உள்ளது.
அமைச்சர் தியாகராஜன்: வழங்கப் போகிறோம் எனக் கூறி உள்ளனர். மத்திய நிதி அமைச்சர், ‘தமிழக அரசு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பது சூழ்ச்சியாக இருக்கும் என நினைக்கிறேன். ‘அவர்கள் ௭ ரூபாய் ஏற்றிவிட்டு ௩ ரூபாய் குறைத்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார். நாங்கள் ஏற்றவில்லை. கடந்த ஆட்சியில் ஏற்றினர்; நாங்கள் குறைத்துள்ளோம். இது சூழ்ச்சி அல்ல; எங்கள் நேர்மை. மத்திய அரசு, ஏழு ஆண்டு
களில் ஒரு முறையாவது வரி குறைத்துள்ளதா? பெட்ரோல் ஏழு மடங்கு, டீசல் 10 மடங்கு விலையை உயர்த்தி உள்ளது.
வானதி சீனிவாசன்: இதற்கு பதில் அளித்தால் கால தாமதம் ஏற்படும். எனவே, மீண்டும் வாய்ப்பு வரும்போது பதில் அளிக்கிறேன். கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ., கவர்னர் உரையில், ‘ஜெய்ஹிந்த்’ என்ற வார்த்தை இல்லாததால், தமிழகம் தலை நிமிர்ந்து விட்டதாக தெரிவித்தார்.
அமைச்சர் வேலு: சகோதரி, புதிய உறுப்பினர். பொதுவாக சட்டசபையில் ஒரு உறுப்பினர் குறித்து, மற்றொரு உறுப்பினர் பேசக் கூடாது என்பது விதி. ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என்பதால் அது குறித்து பேச வேண்டாம்.
மேலும் சில காலமாக தமிழக முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் மத்திய அரசினை ஒன்றிய அரசு என அழைத்து வருகிறார்கள். ஆனால் நேற்று நடந்த சட்டசபை கூட்ட தொடரில் அறிமுக பேச்சை பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் மத்திய அரசினை ஒன்றிய அரசு என அழைப்பதால் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்தும் விடாது குறைந்ததும் விடாது.
மேலும் அவர் வானதி சீனிவாசன் பேசுகையில் கோவையில் மெட்ரோ திட்டம் வருமா வராதா என்ற கேள்வியை முன்வைத்தார். இதற்கு முதல்வர ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு நிதி அளித்தால் தான் அதற்கான திட்டம் கொண்டு வரப்படும் என கூறினார்.
ஒன்றிய அரசு என கூறிவரும் நிலையில் பாஜக சட்டமன்ற உறுப்பினரை பார்த்ததும் மத்திய அரசு என கூறிய மர்மம் என்னவோ முதல்வருக்கு தான் வெளிச்சம்.