கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுகோவில்களில் விளக்கு ஏற்றுவதற்காக மாதாமாதம் தீபஎண்ணெய் வழங்வதற்கான துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கோவில் நிர்வாகிகளுக்கு எண்ணெய் வழங்கினேன். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் அவர்கள் அவர் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நல திட்டங்களை செய்து வருகிறார்.
குறிப்பாக அவர் நடத்தி வரும் மக்கள் சேவை மையம் சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கு இலவச பால் வழங்கும் திட்டமான அமுதம் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. “இலவசமாக பால் வழங்க அட்டை வழங்கப்படும். அந்த அட்டையை கொண்டுவந்தால் மளிகைக் கடைக்காரர்கள் பால் அளித்துவிடுவார்கள். அப்பகுதியில் உள்ள மளிகை கடைகள் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு தினமும் 250 மி.லி. பால் வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 3000 அதிகமான ஏழை குடும்பங்களுக்கு தினமும் பால் வழங்கி வருகிறார் வானதி சீனிவாசன்.
மேலும் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கி வருகிறார்.மேலும் 12 ஆயிரம் இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் , குழந்தைகளுக்காக மோடியின் மகள் திட்டம் என்ற திட்டத்தை உருவாக்கி அதன் மூலம் தந்தையை இழந்து வாடும் குழந்தைகளுக்கு படிப்பிற்கான செலவினை ஏற்றுள்ளார். மேலும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் வானதி சீனிவாசன்.
இந்த வரிசையில் மேலும் சிறுகோவில்களில் விளக்கு ஏற்றுவதற்காக மாதாமாதம் தீபஎண்ணெய் வழங்கும் திட்டத்தினை நேற்று தொடங்கி வைத்தார் வானதி சீனிவாசன். பல சிறிய கோவில்களில் விளக்கு கூட எட்டமுடியாத சூழ்நிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சிறுகோவில்களுக்கு மாதாமாதம் தீபஎண்ணெய் வழங்க ஏற்பாடு செய்துள்ளார் வானதி சீனிவாசன். இந்த புனிதமான திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். வானதி சீனிவாசன்.