தேர்தல் முடிவுக்குப் பிறகு வந்த இரண்டு செய்திகள்.
பாஜக மீது ஆயிரம் விமரிசனங்கள் இருக்கட்டும்.
வானதி சீனிவாசன் தேர்தலில் வென்ற உடன் பாஜக ஆதரவாளர்கள் சார்பாக இங்கிருந்து மேற்கு வங்கத்தில் போய் களத்தில் போராடி கைதாகிறார்.
மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு ஆக்சிஜன் வாங்கிக் கொடுக்கிறார்.
மக்களோடு மக்களாக களத்தில் நிற்கிறார்.
கோவையில் வானதிக்கு வாக்களித்த மக்கள் அவரை சந்திக்க முடியும், தங்கள் குறைகளை கூற முடியும், உதவி கோர முடியும், மருத்துவ வசதிகள் வேண்டும், படுக்கை வசதிகள் தேவை என்று உரிமையோடு கோர முடியும்.
அப்படியே கமலுக்கு வருவோம்.
வானதிக்கு விழுந்த வாக்குகளை விட கமல்ஹாசனுக்கு வெறும் 1700 + வாக்குகள் மட்டுமே வித்தியாசம்.
தேர்தல் முடிவு வந்த 5 மணி நேரத்தில் கமல் கோவையிலிருந்து ஃபிளைட் பிடித்து அடுத்த பட ஷீட்டிங்கிற்கு சென்று விட்டார்.
தன் வெற்றிக்காக கொட்டும் மழையிலும், கடும் வெயிலிலும் உழைத்த தன் கட்சி நிர்வாகிகளை, பொறுப்பாளர்களை சந்திக்கவில்லை, ஒரு நன்றி கூறவில்லை. இவ்ளோ உழைச்சிருக்கீங்க மிக்க நன்றி” என ஒரு வார்த்தை கூறி தொண்டர்களை தோல்வியில் துவண்டுவிடாமல் இருக்க முயற்சி செய்யவில்லை. “விடுங்க அடுத்த முறை வெச்சு செய்வோம்”.
வெறும் கமல் என்ற நடிகர் மேல் உள்ள நம்பிக்கையில் இத்தனை ஆயிரம் வாக்குகள் அளித்த கோவை மக்களுக்கு கமல் உறுதுணையாக நிற்கவில்லை, நன்றி சொல்லவில்லை, இந்த உயிர் போகும் இக்கட்டான நேரத்தில் என்ன தேவை, என்ன வேண்டும், தன் புகழைப் பயன்படுத்தி அந்த மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவில்லை,
ஓட்டுப் போட்டல்ல அதோட முடிஞ்சிது “செத்தா சாவு” என்று சொல்லி வாக்கு எண்ணிக்கை முடிந்த 5 மணி நேரத்தில் ஃபிளைட் பிடித்து ஷீட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார்.
இது தான் ஒரு நடிகன் முதலமைச்சராக ஆசைப்படுவதற்கும், தன் கொள்கையில் பிடிப்பு கொண்ட ஒரு களப்போராளி அரசியலில் இறங்குவதற்கும் உள்ள வேறுபாடு.
கோவை என்பது பாஜக ஆதரவு மக்கள் அதிகம் வாழும் பகுதி, அங்கு வானதி சீனிவாசன் பல ஆண்டுகளாக மக்களுக்காக சேவையாற்றி வருகிறார். ஆனால் கமல் என்ற கதாபாத்திரம்
வெறும் பிக்பாஸில் மட்டும் தன்னை நேர்மையாளனாகக் காட்டி திரைக்கவர்ச்சியை வைத்து வென்றுவிட முடியும் என நினைத்த கமல் வென்றிருந்தால் கோவை மக்களைப் பார்த்து பரிதாபப்பட்டிருப்பேன்.
வானதி சீனிவாசன் வென்றதே சரி. நடிகர்களுக்கு இனி அரசியல் மேல் ஆசை வரக்கூடாது பயம் வர வேண்டும்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















