தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்கு நாடு உருவாக வேண்டும் என சமூக வலைதளப் பக்கத்தில் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் கொங்குதேர் வாழ்க்கை என்ற சங்கப் பாடலை குறித்து பதிவிட்டிருந்தார்.மேலும் வானதி சீனிவாசன் அவர்கள் கொங்கு மாநிலத்திற்கு ஆதரவு அளித்தார். இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் இனி திமுக VS பாஜக என்ற நிலை உருவாகியுள்ளது.
வானதி அவர்கள் கோவை தெற்கு தொகுதியில் வெற்றி பெற்ற தருணத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கொங்கு நாடு என குறிப்பிட்டது தற்போது வைரலாகி வருகிறது. கொங்கு நாட்டிற்கு முதலில் முழக்கம் கொடுத்தவர் வானதி சீனிவாசன் என்று சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அவர் பதிவிட்ட பதிவு :
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எனக்கு ஆதரவு அளித்த @AIADMKOfficial மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக கூட்டணியில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொங்கு நாட்டில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற அயராது உழைத்த அன்பு சகோதரர் திரு. @SPVelumanicbe அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறிவருகிறது. இது மத்திய அரசால் பிரிவினை பேச்சாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆளூநர் தனது உரை முடிவில் ஜெய்ஹிந்த் என்று கூறாமல் பேச்சை முடித்து இருக்கிறார். ஆனால் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஜெய்ஹிந்த்தை கொச்சைப் படுத்தி பேசியுள்ளார். இதற்கு முதல்வர் தரப்பில் எந்த விளக்கமும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்ப முயன்ற வானதி சீனிவாசனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என தெரிவித்தார். மேலும் அவர் தேசிய மகளிரணி தலைவராக இருப்பதால் டெல்லிக்கு அடிக்கடி சென்றுவருகிறார் . ஜெய்ஹிந்த் விவகாரம் மற்றும் ஒன்றிய அரசு விவகாரம் குறித்தும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கொண்டு சென்றுள்ளார் வானதி சீனிவாசன். அதன்பின் தான் இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. ரகசியமாக நடந்த இந்த விஷயங்கள் தற்போது வெளிவர தொடங்கியுள்ளது.
கொங்கு நாடு மாநிலம் வருமா வராதா அடுத்தகட்ட நடவடிக்கை . ஆனால் அதற்கு நடவடிக்கை எடுக்க திராவிட ஸ்டாக்குகள் பதறுகிறார்கள் அதற்கு ஒரே காரணம்தான்.. மொழி வாரி மாநிலங்கள் உள்ளவரைதான் மொழியை வைத்து அரசியல் செய்ய முடியும், பிரிவினை பேச முடியும்.. இவர்களின் அஸ்திவாரத்தில் கைவைத்து விடுவார்களோ என்று பயம் ஆட்டிப்படைக்கிறது.