கன்யாகுமரி மாவட்டத்தில் அருமனை அருகே பனங்கரையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி, அருமனை கிறிஸ்தவ இயக்கம், கிறிஸ்தவ ஜனநாயக பேரவை மற்றும் அனைத்து கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் அருமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், திமுக வெற்றி பெற்றது திறைமையினால் அல்ல கிருஸ்துவர்கள் இஸலாமியர்கள் போட்ட பிச்சை என்றும் ஹிந்து மக்களுக்கு எச்சரிக்கை விடுகிறேன், முடிந்தால் எங்களை தொட்டு பார், எங்களை ஒரு மயிரும் புடுங்க முடியாது, பூமா தேவி அழுக்கானவள்,பிரதமர் மோடி, அமித் ஷா புழு புழுத்து தான் இறப்பார்கள் மேலும் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது தமிழகமெங்கும் காவல் நிலையத்தில் பாஜக சார்பில் புகார்கள் குவிந்தன. மேலும் தமிழக பாஜக பாதிரியாரை கைது செய்ய கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.
இந்த நிலையில் தப்பித்து ஓட முயன்ற பாதிரியார் ஜார்ஜ் அவர்களை கைது செய்தது காவல்துறை பாதிரியார் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில்
சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக தாய் நாட்டை , தலைவர்களை தூற்றுவோருக்கு இந்த கைது எச்சரிக்கையாக அமையட்டும். என பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.