வி.சி.க நிர்வாகி அராஜகம்’… வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சி.. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற அஞ்சல் ஊழியர்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி அஞ்சல் ஊழியராக பணியாற்றிவரும் அற்புதராஜ், என்பவரை இருசக்கர வாகனத்தை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் தொண்டாமுத்தூர் பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

தொண்டாமுத்தூர் எம்ஜிஆர் காலனி பகுதியில் வசித்து வருபவர் அற்புதராஜ், இவர் அஞ்சல் ஊழியராகப் பணியாற்றிவருகிறார். இவர் எம்ஜிஆர் காலனி பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகிறார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், அற்புதராஜ் வீட்டிற்கு முன்பு தொண்டாமுத்தூர் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி என்பவர் குடியிருந்து வருகிறார். அவர் அற்புதராஜ் வீட்டிற்கு செல்லும் செல்லும் மூன்று அடி பாதையை மறைத்துள்ளார். இது குறித்து அஞ்சல் ஊழியர் அற்புதராஜ் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது வழக்காக மாறி மேலும் கீழமை நீதிமன்றத்திற்கு சென்றது. இந்த வழக்கில் அறுபுதராஜுக்குசாதகமாகத் தீர்ப்பு வந்ததையொட்டி ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் ஜார்ஜ் குப்புசாமி அற்புதராஜையும், அவருடைய பிள்ளைகளையும் ஜார்ஜ் அருவருக்கத்தக் சொற்களால் திட்டி இருசக்கர வாகனத்தில் மோதி கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை புகார் மனு அளித்துள்ளார் அற்புதராஜ். ஆனால் எந்தவித நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கவில்லை.இந்நிலையில், மனமுடைந்த அற்புதராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதனது மூன்று பிள்ளைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்த்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அற்புத ராஜை உடனடியாகத் தடுத்து நிறுத்தி அவரை மீட்டு பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அற்புதராஜ் கூறியதாவது , “எனது வீடு அருகே உள்ள மூன்றடி நிலத்தை தொண்டாமுத்தூர் பகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ள ஜார்ஜ் என்பவர் ஆக்கிரமித்துள்ளார்.

இதனால் எங்களுடைய வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. இது குறித்து காவல் துறையிடம் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் அளித்தும் தற்போதுவரை புகார் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே எனது மனைவியை ஜார்ஜ், அவரது மகன்கள் வெட்டி உள்ளனர். தற்போது எனது வீட்டை காலி செய்து வேறு வீட்டிற்கும் சென்றும்கூட, எனது பிள்ளைகள் அவ்வழியாகச் செல்லும்போது ஜார்ஜ் தகாத சொற்களால் திட்டுவது, வாகனத்தை வைத்து மோதுவது போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவருகிறார்.இதனால் எனது குழந்தைகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். எனவே இது சம்பந்தமாக அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version