கோவை மாவட்டம், பொள்ளாச்சி, செமணாம்பதி சோதனைச்சாவடியில், குடிமைப்பொருள் வழங்கல் துறை போலீஸ் மற்றும் ஆனைமலை போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, பிரஸ் என எழுதப்பட்ட காரை சோதனையிட்டதில், நான்கு மூட்டைகளில் 200 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. காரில் இருந்த ஆனைமலை மக்கள் சக்தி நகரை சேர்ந்த சாதிக், 30, என்பவரை கைது செய்தனர்.
அவர், ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் ரேஷன் அரிசி வாங்கி கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரிந்தது.இது குறித்து போலீசார் கூறுகையில், ‘காரில், பிரஸ் என எழுதி சென்றால் போலீசாருக்கு சந்தேகம் இருக்காது என நினைத்துள்ளனர். எனினும், எங்களிடம் சிக்கி விட்டார்’ என்றனர்.
கைது செய்யப்பட்ட சாதிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆனைமலை ஒன்றிய பொறுப்பாளர். இவர், கட்சித் தலைவர் திருமாவளவனுடன் எடுத்த படத்தையும் காரில் வைத்து இருந்தார்.அவரை விடுவிக்க, தி.மு.க., கூட்டணி கட்சியினர் போலீசாருடன் நீண்ட நேரம் பேச்சு நடத்தினர்.ஆனாலும் அது பலன் அளிக்கவில்லை.