உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்து வருகிறது. இதை மக்களும் பரவலாக பாராட்டி வருகின்றார்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஞாயிற்று கிழமை இந்திய முழுவது ஒருநாள் சுய ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். அன்று மாலை 5 மணி அளவில் மக்கள் சேவை ஆற்றும் துப்புரவு பணியாளர்கள் செவிலியர்கள் மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் அவரவர் வீட்டிலிருந்து கைகளை தட்டி ஒலி எழுப்புமாறு வேண்டுகோள் விடுத்தார்.
இதை இந்திய மக்கள் அனைவரும் ஏற்று கர ஒலியால் இந்தியாவை அதிர வைத்தது. தமிழ்நாட்டிலும் இந்த கரவொலி விண்ணை பிளந்தது. இதை தங்கி கொள்ள முடியாத தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் இந்தியாவை அவமானபடுத்தி வருகிறார்கள். இதற்கு ஒருபடி மேல் சென்று ஸ்டாலின் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோன வைரஸ் குறித்து போலி செய்தியை பரவவிட்டார்.
இதனை தொடர்ந்து கூட்டாளிகள் நமதுநாட்டிற்கு அவப்பெயரை ஏற்படும் நோக்கில் பல போலி செய்திகளை பரவ விடுகின்றார்கள். திமுகவிடம் மரியாதையை அடகு வைத்துள்ளா விடுதலை சிறுத்தை கட்சியின் பொறுப்பாளரும் தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி ரவிகுமார். தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் “இந்தியாவின் கொரொனா தடுப்பு நடவடிக்கை – சீன ஊடக நிறுவனம் ‘பாராட்டு'” என பதிவிட்டுள்ளார். அது நக்கல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
அதுவும் போலியான ட்விட்டர் கணக்கின் ட்வீட்டை மேற்கோள் காட்டியுள்ளார். வேண்டுமென்ற போலி ட்விட் கணக்கை மேற்கோள் காட்டி அதை இந்தியவை நக்கல் செய்தும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்ரின் இந்த பதிவானது பல கண்டனங்களை பெற்று வருகிறது.
ஸ்டாலினோ கொரோனாவால் தமிழகத்தில் 9 பேர் பலி என்று பொய் செய்தியை பரப்பி தமிழகத்தில் அச்ச உணர்வை தூண்டினார். இவரோ தடுப்பு நடவடிக்கைகளை கிண்டல் செய்கிறார். எப்போது திருந்தும் இந்த ஜென்மங்கள் என்று நெட்டிசன்கள் கடுமையாக சாடி வருகின்றார்கள்!