தமிழகத்தில் விடுதலை சிறுத்தை நிர்வாகிகள் செய்யும் குற்றம் குறித்து வாய் திறக்காத இதுல சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் எங்கே ?
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் காலனி தெருவை சேர்ந்த வெள்ளையன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளராக உள்ளார்.
மேலும் அதே பகுதியில் மளிகை கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவர் தனது மகள் முறை உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியை வீட்டை கூட்ட வேண்டும் எனக் கூறி வீட்டிற்குள் அழைத்துள்ளார்.
பெற்றோர்களை இழந்து தனது பாட்டியுடன் வசிக்கும் அச்சிறுமி வீட்டை கூட்ட சென்றுள்ளார். அப்போது வெள்ளையன் சிறுமியிடம் தகாத முறையில் ஈடுபட்டதால் அதிர்ச்சி அடைந்த அச்சிறுமி கூச்சலிட்டவாரு அவனிடமிருந்து தப்பித்து, உறவினர்களிடம் இது குறித்து கூறியுள்ளார்.
இதனை அடுத்து காவல் நிலையத்தில் உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து வெள்ளையனை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வெள்ளையனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பாஜக ஆளும் மாநிலத்தில் நடைபெற்றால் பொங்கும் போலி போராளிகள் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி செய்து இதற்கு வாயை மூடிக்கொண்டு உள்ளது காரணம் என்னவோ ?