என்றாவது ஒருநாள் திமுக நிர்வாகிகளில் யாராவது ஒருவர்
விசிகவுக்கு நாங்கள் போட்ட பிச்சைதான் இரண்டு பாராளுமன்ற தொகுதின்னு ஒருநாள் சொல்வார்கள்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால்,
ஈவெரா ஒருமுறை இப்படிதான் பட்டியல் சமூக மக்களை சொன்னார். ‘நாங்கள் எவ்வளவோ செய்தோம். ஆனால் இவர்கள் எங்களையே குற்றம்சாட்டுகிறார்கள். நன்றி இல்லாதவர்கள்’ என்று சொன்னார்.
கருணாநிதி அவர்கள் ஏதோ செய்யக்கூடாத காரியத்தை செய்துவிட்டவர் போல ‘பட்டியல் சமூகத்திலிருந்து பெண் எடுத்து இருக்கிறேன்’ என்று அடிக்கடி சொன்னார்.
வீரமணி – ரங்கராஜ் பாண்டே பேட்டியில், வீரமணி சொன்னார் : ’திருமாவளவனை நாங்கதான் முதன்முதல்ல கூட்டிட்டு வந்து மேடை கொடுத்து அடையாளம் காட்டினோம்’ என்று சொன்னார்.
வைகோவும் எங்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் தலித்துகள்தான் என்று சொன்னார். அதை விமர்சனம் செய்த விசிகவை கண்டித்து உங்களுக்கு 30லட்சம் கொடுத்தேன். என்னை உரசினால் தீப்பிடிக்கும் என்று தேர்தலுக்கு கொடுத்த பணத்தை வைத்து கொச்சைப்படுத்தினார் வைகோ.
ஆர்.எஸ்.பாரதி ஆதிதிராவிடர்கள் நீதிபதியாக வருவதற்கு நாங்கள் போட்ட பிச்சை என்று சொன்னார்.
திராவிட இயக்கத்தினருடைய இரத்தத்திலேயே ஆதிக்கசாதி வெறி ஊறியிருக்கிறது. அதனால்தான் சொல்கிறேன்.
கட்டுரை:- வெங்கடேசன்,மாநில தலைவர்,SC பிரிவு தமிழக பாஜக.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















