இந்து மக்கள் அனைவரும் ஒருகிணைந்து ஒற்றுமையுடன் நேற்று நடைபெற்ற ‘வேல் பூஜை’ யில் கிராமப்புற மக்களிடத்தில் ஏற்பட்டு இருக்கின்ற ஆன்மீக எழுச்சி கண்டு பிரமிப்பாக உள்ளது. தமிழகத்தில் துவங்கியிருக்கின்ற இந்த ஆன்மிக எழுச்சி என்பது இந்து விரோத கறுப்பர் கூட்டம் திமுகவிற்கு தக்க பாடம் புகட்டும்.
வெற்றி வேல் ! வீர வேல்! என எங்கும் எதிரொலித்தது கந்த சஷ்டி கவசம். நேற்று மாலை ஆடி சஷ்டி தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் வீடுகளில் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் படித்து தமிழ்கடவுள் முருகனை வணங்கினர். தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் வசிக்கும் தமிழக மக்கள் முருகனை வழிபட்டனர். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ,தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் இந்து மக்கள் கட்சினர் வேல் பூஜை செய்து முருகனை வழிபட்டார்கள்.
தமிழகம் முழுக்க நேற்று 09.08.2020 நடைபெற்ற “வேல் வழிபாடு” “கந்த சஷ்டி கவச பாராயணம்” அனைத்து மக்களின் ஒற்றுமை வரவேற்பை பெற்றுள்ளது . “முருகபக்தி அலையை உருவாக்கி, தமிழகத்தில் நல்ல மாற்றத்தை” உருவாக்க தமிழக முழுவதும் அனைத்து வீடுகளிலும், இல்லம்தோறும் ‘வேல்பூஜை’ உள்ளம்தோறும் ‘கந்தசஷ்டி’ இந்து விரோதிகளுக்கு எதிராக சூரசம்ஹார யுத்தத்தில் முருகபெருமானின் பக்தி வெற்றிபெற தேவையான மன வலிமையை தந்தருள பிரார்த்தனை செய்யப்பட்டது.
தமிழ்கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும் இழிவுபடுத்துவதாக கூறி யூடூப்பில் கருப்பர் கூட்டத்தினர் பதிவிட்டனர் . இதற்கு தண்டனையாக சிறைவாசம் கிடைத்து, குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது. இதற்குப் பிறகுதான் முருகனை வணங்காதவர்களும் வணங்கத் தொடங்கியுள்ளனர் .முருகனை இழிவு படுத்தியவர்களை கண்டித்தும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்க வேண்டியும் ஆடி மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு நேற்று மாலை தமிழகத்தில் அனைத்து இந்து மக்களும் வேல் பூஜை செய்து முருகனை வணங்கி வழிபட்டனர்.
கந்தனுக்கு வேல் வேல் …..முருகனுக்கு வேல் வேல்……..வெற்றிவேல்! வீரவேல்!
ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை கேலி செய்த கருப்பர் கூட்டம் குறித்து, ஓர் அறிக்கை வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேட்டிருந்த நிலையில், மத்திய அரசின் உளவுத் துறை, கருப்பர் கூட்டம் தொடர்பான முழு விபரங்களை திரட்டி அமித்ஷாவிடம் அளித்ததோடு, கருப்பர் கூட்ட அமைப்பின் பின்னால் இருந்தவர்கள் யார்? எந்த அரசியல் கட்சிகளுடன் இந்த கூட்டம் தொடர்பு வைத்துள்ளனர் என, திரட்டப்பட்ட அனைத்து ஆதரங்களையும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் உளவுத்துறை ஒப்படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது