ராணி கிட்டூர் சென்னம்மா, ஜான்சி ராணி லட்சுமி பாய் என துணிச்சசலான பெண்கள் பெயரில் இந்திய கடலோர கப்பல்கள் இயங்கிவருகின்றது, இந்நிலையில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை ரோந்து கப்பலுக்கு சூட்ட இந்திய கடலோர காவல்படை ஆலோசனையை மேற்கொண்டது மேலும் வீர மங்கை வேலுநாச்சியாரை முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை என்று அங்கீகரித்து கடலோரக் காவல்படை தங்களது கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயரை சூட்ட முன் மொழிந்துள்ளது
இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல்படை திட்டக்குழு, இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு ஒரு குறிப்பு அனுப்பியதன் மூலம், விரைவு ரோந்து கப்பலுக்கு வேலுநாச்சியாரின் பெயரை சூட்டுவதற்கான செயல்முறை பணிகள் தொடங்கியுள்ளன.
வேலுநாச்சியாரின் வீரத்தை பற்றி ஆய்வு செய்த ஸ்ரீராம் சர்மா, என்பவர் வீரமங்கை வேலு நாச்சியார் என்ற நாடகத்தோடு நின்றுவிடாமல் 2016 ஆம் ஆண்டிலேயே ஒரு முக்கியமான முன்னெடுப்பைச் செய்துள்ளார் கடலோர காவல்படை கப்பலுக்கு வேலுநாச்சியார் பெயரை சூட்ட வேண்டும் என்று 2016 ஆம் ஆண்டில் அவர் இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “இந்திய கடற்படை விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி மற்றும் சென்னையில் அதன் முக்கிய செயல்பாட்டு தளங்களைக் கொண்டுள்ளது. திருநெல்வேலி அருகில் உள்ள விஜயநாராயணபுரத்தில் ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை மையம் இயங்கி வருகிறது.பாஞ்சாலங்குறிச்சியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் கட்டபொம்மனின் நினைவாக கடற்படை மையத்துக்கு கட்டபொம்மன் பெயர் சூட்டப்பட்டது.
இதனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, அடுத்ததாக தேசத்திற்கு அர்ப்பணிக்கப் போகும் கப்பற்படை கப்பலுக்கு ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய ராணி வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரை சூட்ட வேண்டும்” என்று கேட்டுகொண்டிருந்தார்.
இது குறித்து அவர் பேசுகையில் 2016 இல் நான் இந்திய கடலோர காவல்படை தலைமையகத்துக்கு இதுகுறித்து எழுதினேன் . உடனடியாக எனக்கு பதில் அளித்த அவர்கள், இதுகுறித்து சென்னை கடலோர காவல்படை தலைமையகத்தில் சென்று நேரடி மனுவாக அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். நானும் உடனடியாக அவ்வாறே செய்தேன். அந்த முயற்சி இப்போது முளைவிட்டிக்கிறது. ராணி வேலுநாச்சியாரின் பெயர் இந்திய கடலோர காவல்படை கப்பலில் பொறிக்கப்படுவதை விட பெரு மகிழ்ச்சியும் பெருமையும் இருக்க முடியாது. விரைவில் இந்த நடவடிக்கைகளை பூர்த்தி செய்திட வேண்டும்” என்றார்.
இது ஒருபுறமிருக்க சமூக வலைதளங்களில் திமுகவை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளார்கள் தமிழர் என்ற காரணத்தால்தான் தனது சொத்துக்களை விற்று பாடுபட்டு செக்கு இழுத்து உயிர் விட்ட வ.உ.சி பிறந்த மண்ணில் (திருநெல்வேலி) கட்டிய பேருந்து நிலையத்திர்க்கு அவர் பெயரை வைக்காமல் ஈவேரா பெயர் சூட்டுகிறார்கள் .
எந்த திட்டங்கள் எடுத்தலும் கலைஞர் அல்லது கருணாநிதி பெயரை சூட்டி வருகிறது இந்த திமுக அரசு.ஏன் தமிழகத்தில் தமிழுக்காகவும் தேசத்திற்காகவும் உழைத்தவர்கள் யாரும் இல்லையா என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள்.
தமிழ் தாத்தா என நாம் வரலாற்றில் அறியப்படும் அறிஞர் உ.வே.சாமிநாதய்யர். அழிந்துக்கொண்டுயிருந்த சங்ககால நூல்களை, ஓலைச்சுவடிகளாக இருந்தவற்றை தேடித்தேடி கண்டறிந்து அதை பதிப்பித்த உரைநடை ஆசிரியர், பதிப்பாசிரியர், தமிழறிஞர் தமிழை காத்தவர்.அவர் பிறந்த தினமான பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வருகிறது கோவையில் மிகப்பெரிய கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என்று இது தான் தமிழ் காத்த உ.வே.சாமிநாதய்யர்க்கு வழங்கப்பட மரியாதை என கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.