சமூகவலைதளைங்களில் தற்போது வைரலாகி வருவது கோவை மதுக்கரையில் உள்ள ராணுவப் படைப்பிரிவு வளாக நுழைவுவாயிலில் இடம்பெற்றுள்ள வெற்றிவேல், வீரவேல் தான். கடந்த ஆண்டு இதே மாதம் தமிழர் கடவுளான முருக பெருமானை கறுப்பர் கூட்டம் என்ற யூ ட்யூப் சேனல் கொச்சையகா பேசி கந்த சஷ்டி புராணத்தை இழிவுபடுத்தியும் வீடியோ வெளியிட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்கள் முதல் இந்து ஆன்மீகவாதிகள் வரை கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தினை பாஜக கையில் எடுத்து முருகன் கோவில் அமைந்துள்ள அறுபடை வீடுகளுக்கும் வெற்றிவேல் யாத்திரையை தொடங்கியது. அந்த யாத்திரையில் வெற்றி வேல் வீர வேல் என்ற முழக்கத்துடன் அமைந்தது,பின் முதல்வர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை அனைவரும் கையில் வேல் ஏந்தினார்கள். அந்த அளவிற்கு வெற்றிவேல் யாத்திரை அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான் தற்போது கோவை மதுக்கரையில் உள்ள ராணுவ படைப்பிரிவு வளாகத்தின் நுழைவு வாயிலில் ‘வெற்றிவேல், வீரவேல்’ என்ற வாசகம் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நுழைவு வாயில் புகைப்படத்துடன் அங்கு எழுதப்பட்டுள்ள வாசகத்தைக் குறிப்பிட்டு கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு, விவாதங்களை எழுப்பியது.
இதனை தொடர்ந்து பாதுகாப்புத் துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் விசாரித்தபோது “மதுக்கரையில் உள்ள ராணுவ படைப்பிரிவு தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே, நுழைவு வாயிலில்வெற்றிவேல் வீரவேல் முழக்கம் இடம்பெற்றுள்ளது.தெரியவந்துள்ளது.
இந்திய ராணுவத்தில் பல படை பிரிவுகள் உண்டு. ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் இப்படியான தனித்த வெற்றி முழக்கங்கள் இருக்கும். ‘வெற்றிவேல், வீரவேல்’ என்பது தமிழரின் வீர முழக்கம் என்பதால், அந்த முழக்கத்தை மதுக்கரை படைப்பிரிவு பயன்படுத்தி வருகிறது. என விளக்கமளித்துள்ளார்.!