தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன்வெளியிட்டுள்ள அறிக்கையில் : கொரோனா பாதிப்பு அளவு, தமிழகத்தில் உயர்ந்தபடி இருக்கிறது. இது, நமக்கெல்லாம் மிகுந்த வேதனை அளிக்கிறது.தேவையான அனைத்து தடுத்து நடவடிக்கைகளையும், மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.உயர்வுமிக முக்கியமான பணிகள் தவிர்த்து, மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு பக்கம் பாதிப்பு உயர்வது போல, மறு பக்கம் குணம் அடைவோர் எண்ணிக்கையும், உயர்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே, நம்பிக்கையோடு, எச்சரிக்கையோடு இருப்போம்; கொரோனாவை வெல்வோம்.தமிழக பா.ஜ.க சார்பில், மத்திய அரசின் ஓராண்டு சாதனைகளை, மக்களிடம் எடுத்துச் செல்ல, ‘காணொலி கூட்டம்’ நடத்தப்படுகிறது. இதுவரை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியுஷ் கோயல் உட்பட பலர் பேசிஉள்ளனர்.இதுவரை, 18 லட்சம் பேர், தலைவர்களின் பேச்சை கேட்டுள்ளனர். நாளை, தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் பேச உள்ளார்.அதேபோல, மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாய அணி, பிற்படுத்தப்பட்டோர் அணி எஸ்.சி. – எஸ்.டி. அணி, சிறுபான்மையினர் அணி சார்பில், சட்ட சபை தொகுதிகள் அளவில், 234 தொகுதிகளில், 1,170 கூட்டங்கள், ஜூலை 2 வரை நடத்தப்பட உள்ளன.
பங்கேற்பு
இக்கூட்டங்களில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி., இல.கணேசன், கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் நிர்வாகிகள் என, 180 பேர் பேசஉள்ளனர்.இக்கூட்டத்தை நடத்தவும், கூட்டத்தில் பெரும் திரளானோரை பங்கேற்க வைக்கவும், சட்டசபை அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் டாக்டர்.எல். முருகன் கூறியுள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















