கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி விமான நிலையத்தில் அடிவாங்கிய சம்பவம் பரபரப்பினை கிளப்பியது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் வைரலாகியது. பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இரண்டு நாட்களில் அடங்கி விட்டது. விஜய் சேதுபதி மீது ஏன் தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கேள்வி மில்லியன் டாலர் கேள்வி இருந்து வந்தது. இது பற்றி விஜய் சேதுபதி வாய் திறக்கவில்லை. அனைவரும் விஜய் சேதுபதியை தாங்கியவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் தமிழன் விஜய் சேதுபதியை தாக்கினர் என சமூக வலைத்தளங்களில் பரவியது.
நாடு முழுவதும் வைரலான வீடியோ பற்றி மேலும் ஊடங்கங்களும் இதை பற்றி விவாதங்கள் நடத்தவில்லை. இந்த விஷயத்தினை அப்படியே மூடி மறைக்க தொடங்கிவிட்டார்கள். விஜய் சேதுபதி காவல்துறையில் புகார் கொடுக்கவிலை. இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இதுவே தமிழ் நடிகர்கள் பெங்களுருவில் தாக்கப்பட்டிருந்தால் உள்ளூர் ஊடங்களும் சரி தேசிய ஊடகங்களிலும் நாட்டில் சகிப்பு தன்மை இல்லையா என மூன்று நாட்களுக்கு விவாதம் நடத்துவார்கள் ஆனால் விஜய் சேதுபதி தாக்கப்பட்ட செய்தி குறித்து எந்த ஊடகமும் விவாதம் நடத்தவில்லை.
பல ஊடகங்கள் பல கதைகளை சொன்னார்கள் ஆனால் உண்மையில் என்ன நடந்தது தற்போது வெளிவந்துள்ளது. ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது , சாலையில் நடந்து சென்ற விஜய் சேதுபதியை செல்கிறவரை அடிக்கும் அளவிற்கு என்ன நடந்துள்ளது என்பதை இளையபாரதம் யூடுப் சேனல் கொண்டுவந்துள்ளது. நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்திய நபர் கேரளாவை சேர்ந்தவரோ அல்லது கர்நாடகாவை சேர்ந்தவரோ கிடையாது தமிழகத்தை சேர்ந்தவர்என்பது தெரியவந்துள்ளது.
விஐய் சேதுபதியை எட்டி உதைத்த நபரின் பெயர் மாக காந்தி இவர் அளித்துள்ள பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. மேலும் அவர் விஜய் சேதுபதியை அடிக்க சொன்ன காரணம் விஜய் சேதுபதியின் கீழ்த்தரமான பேச்சு ஆகும். மாக காந்தி போட்டியில் கூறியாதவது : நான் தான் விஜய் சேதுபதியை அடித்தேன், விமான நிலையத்தில் அவரை பார்த்த நான் தேசிய விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் என கூறினேன் இதெல்லாம் தேசமா என கேட்டார், இது எனக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நான் ஒரு தேசியவாதி தேசத்தை மதிக்கும் பசும்பொன் தேவர் வழியில் வந்தவன்.
மேலும் விஜய் சேதுபதியிடம் தேவர் குரு பூஜைக்கு வருவீங்களா என கேட்டேன் அதற்கு யார் தேவர் என தவறாக பேசினார், மேலும் குரு ஜூவிஷ் கார்பென்டர்தான் குரு என சொன்னார். இது பற்றி பல கேள்விகளை நான் எழுப்பினேன் எழுப்பிய பேசி கொண்டிருக்கும் போதே என்னை அடிக்கவும் செய்தனர், இனிமேலும் பொறுத்து கொள்ள கூடாது என்றுதான் அடித்தேன், என்னை அடித்தார் திருப்பி அடித்தேன் தேசத்தையும், தேவரையும் தவறாக பேசியதால் அடித்தேன் என மாகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தமிழகத்தில் புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தற்போதுதான் ஜெய் பீம் திரைப்படம் தமிழகத்தில் வன்னியர் சமூக சர்ச்சையை கிளப்பி விட்ட நிலையில் விஜய் சேதுபதியின் பிரச்சனை தேவர் சமுதாய மக்களிடையே கடும்கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் தேசத்தையும்,ஆன்மிகத்தையும் இரு கண்களாக கொண்டவர் தேவர்ஐயா அவர்களை தெரியாது என விஜய் சேதுபதி கூறியுள்ளது அனைத்து மக்களிடையும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விவகாரம் வெளிவந்தால் தங்கள் சினிமா தொழிலுக்கு ஆபத்து உண்டாகலாம் என்பதால் விஜய் சேதுபதி தன்னை அடித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஒதுங்கி இருக்கிறார் நியாயப்படி விஜய் சேதுபதியை தான் கைது செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.தற்போது விமான நிலையத்தில் வைத்து இந்தியாவை தேசமா இது என கேட்ட நபருக்கு தேசிய விருது வழங்கலாமா என்ற கேள்வியும், உடனே தேசிய விருதை திரும்பி பெறவேண்டும் எனவும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன,
மேலும் இந்த சம்பவம் குறித்து விஜய் சேதுபதி உண்மையை தெரிவிக்க வேண்டும். விஜய் சேதுபதியை எட்டி உதைத்த 30 வினாடி வீடியோ மட்டும் வெளிவந்தது. மாக காந்தியை அடித்த வீடியோ வெளிவரவில்லை. எனேவ விமான நிலைய நிர்வாகம் உடனடியாக வழக்கு பதிவு செய்து உண்மையை கண்டறிந்து விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.
இந்த சூழலில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் பட்சத்திலும், விமான நிலையத்தில் நடைபெற்ற அடிதடி காட்சிகள் வெளியானால் நிச்சயம் விஜய் சேதுபதி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.விஜய் சேதுபதி தரப்பு அமைதியாக இருக்கும் போதே இதில் பெரிய விஷயம் இருக்கும் என்று வெளியான தகவல் தற்போது வெளிவந்துவிட்டது. பொறுத்திருந்து பாப்போம் தமிழக நடிகர்களின் உண்மை முகம் ஒவ்வென்றாக வெளிவருகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















