பெரும்பாலான தனியார் தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்களை நம்பிதான் பிழைப்பு நடத்தி வருகின்றன. கதை இல்லாவிட்டால் இல்லாவிட்டாலும் நடப்பது, ஓடுவது யாரையாவது கடத்துவது போன்று ஒரு காட்சி அவரை கண்டுபிடிக்க தேடுவது கார் ஓட்டுவது என காட்டி ஒரு வாரத்தை ஓட்டி விடுகின்றன. சரி அதை விட்டால் ஒட்டுக்கேட்பது, போட்டுக் கொடுப்பது, குடும்பத்தை கலைப்பது, கணவன் மனைவியை சேரவிடாமல் பிரிப்பது என ஓட்டி வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி ஒன்றில் வெளியிடப்பட்ட சீரியல் ட்ரைலர் காட்சியில் பெண் ஒருவருக்கு கோவிலில் வைத்து தாலி கட்டும் காட்சி ஒன்று அமைந்துள்ளது.. இந்த காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பெண்கள் ஒருபுறம் ட்விட்டரில் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க கண்காணிப்பாளரும் இந்த நாடக காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கையும் விடுத்துள்ளது தான் தற்போது ஹாட் டாப்பிக்.
போன்ற காட்சிக்கு பெண்கள் டுவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கும் என்று திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரித்துள்ளார்.
விஜய் டிவி யில் ஒரு சீரியல் புரமோ வெளியாகி நெட்டிசன்களால் வறுபட்டு வருகிறது. அதாவது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலின் முன்னோட்ட காட்சி தற்போது டுவிட்டரில் வெளியிடப்பட்டது. அதில் முதல் காட்சி வெளிநாட்டில் படித்து வந்தாலும் கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கியே என நாயகியிடம் ஒரு பாட்டி சொல்வது போல தொடங்கும் அந்த புரோமோ காட்சி, கோவிலுக்குள் காதல் ஜோடி ஒன்று தாலி கட்டிக் கொள்ள அடுத்த நிமிடம் அங்கு வரும் சீரியல் நாயகன், இளம் ஜோடியின் தாலியைப் பறிக்க முயல்கிறான். உடனடியாக அங்கு வரும் சீரியல் நாயகி தாலியின் மகத்துவத்தை எடுத்துகூறுவது போன்ற செண்டிமெண்ட் காட்சி ஒன்றை வைத்துள்ளனர்.
அப்போது அந்த ஹீரோயினின் கையை பிடித்து இழுத்து செல்லும் சீரியல் ஹீரோ, சாமி சிலையின் கழுத்தில் இருக்கும் தாலியை எடுத்து ஹீரோயின் கழுத்தில் போடுகிறார். அதோடு நெற்றியிலும் குங்குமம் வைத்து விடுகிறார்.தொடர்ந்து பேசும் அந்த ஹீரோ, இப்போ உனக்கு தாலி கட்டிட்டேன், பொட்டும் வச்சுட்டேன், நீ என்ன எனக்கு பொண்டாட்டியா என கேட்டுவிட்டு செல்கிறார். இவை எதற்குமே எதிர்ப்பு தெரிவிக்காத அந்த ஹீரோயின் செண்டிமென்ட்டாக பார்ப்பதோடு, அதிர்ச்சியில் கண்ணீர் விட்டு ஃபீலோடு ஹீரோவை கண்ணீர்விட்டு பார்க்கிறார்.
இந்த தாலி செண்டிமெண்ட காட்சி பெண்களை அடிமைப்படுத்தும் செயல் என்றும் இந்த சீரியல் பெண்களை பின்னோக்கி இழுத்துச்செல்கின்றது என்றும் தங்கள் எண்ணக்குமுறல்களை பெண்ணிய சிந்தனையாளர்கள் டிவிட்டரில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
அந்தவகையில் பத்திரிகையாளர் கவிதா முரளி என்பவர், டுவிட்டரில் இந்த சீரியல் காட்சிகளை சுட்டிக்காட்டி பெண்களுக்கு எதிரான அடக்குமுறை என்று சாடி இருந்தார். இந்த தாலிக்காக அடாவடி செய்யும் நாயகனை திருத்தி நல்வழிப் படுத்துவதுதான் ஒரே வழி என்பது போல சிலர் கருத்து பதிவிட்டிருந்தனர்.
அவர்களது ஆதங்கத்துக்கு பதில் அளிக்கும் வகையில் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார், அதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்சட்டம் பிரிவு 4 இன் படி, இது போன்று கோவிலில் வைத்தோ, கல்வி நிலையங்கள், பேருந்து நிலையம் , ரயில் நிலையம் , பூங்கா, சினிமா தியேட்டர், கடற்கரை, திருவிழா திடல், பொதுமக்கள் கூடும் வேறு இடங்கள்,
பொது பயன்பாட்டு வாகனங்கள், கப்பல் என எங்கு வைத்து பெண்களுக்கு எதிரான இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 3 ஆண்டு சிறை தண்டனையுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகையுள்ளது என்று சுட்டிக்காட்டி இருந்தார் .