தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வெற்றியை பொதுக்கூட்டம் பேரணி நடைபெற்று வருகிறது.
இதன் தொடர்ச்சியாக விழுப்புரம் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதுவரை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற எந்த ஒரு கூட்டத்திலும் விழுப்புரம் மாவட்டத்தில் இவ்வளவு தொண்டர்கள் கலந்து கொள்ள வில்லை என்பது நகரவாசிகளின் பேச்சாக உள்ளது.
தற்பொழுது விழுப்புரம் மாவட்ட தலைவராக உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விடிகே.கலிவரதன் தீவிர முயற்சியினால் பல கட்சியிலிருந்து நிர்வாகிகள் பாஜகவிற்கு தினந்தோறும் சேர்ந்து வருகின்றனர் .
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற வெற்றிவேல் யாத்திரை கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சமூக வலைதளத்தில் ஒரு வலதுசாரி சிந்தனையாளர் பதிவிட்ட பதிவு.
பாஜக கூட்டம்…. அவரவர்களாகவே சேர்ந்த கூட்டம். பெரிய முயற்சி, வெற்றியும் பெற்றுள்ளது. வந்தால் கைது, மழை வந்து மாட்டிக்குவோமோ என்ற அச்சம். இப்படிப்பட்ட சூழலில், பிரசித்திபெற்ற தலைவர், பிரபல நடிகரையோ பார்க்க வந்த கூட்டமல்ல.
யாருக்கும் பிரியாணி, பணம் கொடுக்கல, மாறாக அனைத்து ஒன்றியங்களிலும் பிரசாரம், ஒவ்வொருவருக்கும் இந்த வேல் யாத்திரை குறித்து பேசப்படும், அறியப்பட்டும் வந்து சேர்ந்த கூட்டம்.
ஆண்டாண்டுகளாக இருக்கும் பெரிய கட்சிகளுக்கு வந்த கூட்டம் போன்று, அதுவும் பணம் கொடுக்காமல் வந்த கூட்டம். உழைப்பின் மதிப்பு, வெற்றிக்கு வழி செய்வோம்.