இந்தியா உட்பட உலகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து இன்ஸ்டாகிராம் பதிவை பகிர்ந்துள்ளார். வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு இந்திய ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி இடம் உண்டு. குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவரை லட்சக்கணக்கான இந்திய ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெடில் ஐதராபாத், டெல்லி அணிகளுக்காக விளையாடி இந்திய ரசிகர்களின் அமோக ஆதரவை அவர் பெற்றுள்ளார். இந்திய சினிமா பாடல்களுக்கு தனது குடும்பத்துடன் நடனமாடும் வீடியோவை வார்னர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
தனது மனைவி மற்றும் மகள்களுடன் நடனம் ஆடியபடி அவர் வெளியிடும் வீடியோ இணையத்தில் பலமுறை வைரலாகி உள்ளது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வார்னர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “எனது நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுற்று இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















