விநாயகர் சதுர்த்தி விழா நடந்தே தீரும்! இந்து முன்ணனி அதிரடி!

ஹிந்துக்களுக்கு அநீதி – விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை – துரோகம் விளைவிக்கிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு – இந்துமுன்னணி கடும் கண்டனம் – திட்டமிட்டபடி 1.5 லட்சம் இடங்களில் விநாயகர்கள் வைக்கப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதித்துள்ளதை
இந்து முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது.

கடந்த 36 ஆண்டுகளாக இந்து முன்னணி இயக்கம் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை இந்துக்கள் ஒற்றுமை விழாக எழுச்சியுடன் கொண்டாடி வருகிறது.

இதுவரை பலவித கட்டுப்பாடுகளை அரசு விதித்த போதிலும், அவற்றையெல்லாம் அனுசரித்து விழாவை முன்னெடுத்து வந்துள்ளது என்பதை அரசும், அரசு அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் நன்கு அறிவர்.

இந்நிலையில் இந்த ஆண்டு உலகே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ள கொராணா தொற்று நோய் காரணமாக சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன் விழா எடுக்க இந்து முன்னணி ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 5ஆம் தேதி தமிழக அரசின் செயலர் கூட்டிய கூட்டத்தில் நமது கருத்தை வலியுறுத்தி கூறியிருந்தோம். அப்போது அரசு தரப்பும் விழா நடத்துவதற்கு சாதகமாகவே பேசினர்.

மக்களிடையே ஆன்மிக நம்பிக்கை தான், நோய் எதிர்ப்பு சக்தியையும், நோயை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

அதற்காகவே, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை எளிமையாகவும், அதே சமயம் ஆன்மீக சூழ்நிலையிலும், கட்டுப்பாட்டுடனும் நடத்திட ஏற்பாடுகளை செய்து வருகிறது.

தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க எத்துனை ஆர்வம் காட்டியது, உச்சநீதி மன்றம் வரை சென்று வென்று வந்தது என்பதை மக்கள் அறிவர்.

மதுக்கடைகளில் கூடிய கூட்டத்தை அரசு வேடிக்கை பார்த்தது, அதே சமயம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்குத் தடை விதித்துள்ளது வேதனையானது.விநாயகரிடம் விளையாடிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் நிலை என்னவானது என்பதை அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

ரம்ஜான் கஞ்சிக்கு அரிசி கொடுத்தும், நாகூர் தர்கா விழாவிற்கு 40 கிலோ சந்தனமும் கொடுத்தது தமிழக அரசு.தூத்துக்குடி பனிமய மாதா விழா குறித்து பாதிரியார் பேட்டி தர மாவட்ட ஆட்சியரும், கண்காணிப்பாளரும் பக்கத்தில் உட்கார்ந்து ஆதரவு கொடுக்க வைத்தது தமிழக அரசு .ஆனால், இந்துக்களின் அனைத்து விழாக்களையும் தடுத்து நிறுத்த அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தியதை இந்துக்கள் அறிவர்.

ஒடிசாவில் ஜகந்நாதர் தேர் திருவிழாவின் சிறப்பை உணர்ந்து உச்சநீதி மன்றம் கட்டுப்பாடுடன் நடத்த அனுமதி அளித்தது. இதே நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுடன் நடத்த இந்து முன்னணி அரசை கேட்டுக்கொண்டது.ஆனால் தற்போது தமிழக அரசு ஹிந்துக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில், இந்து விரோத நிலைப்பாட்டை எடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது.பிற மதங்களுக்கு எத்தகைய உரிமைகள் உள்ளனவோ அதேபோல இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமைகள் உள்ளன எனவே வழிபாட்டு உரிமைகளை மீட்கும் வகையில் , தக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் ஆகஸ்ட் 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா ஒன்றரை இலட்சம் இடங்களில் திட்டமிட்டபடி
நடக்கும் என்பதை இந்து முன்னணி உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறது

தாயகப் பணியில் காடேஸ்வரா சி சுப்பிரமணியம்
மாநிலத் தலைவர்

Exit mobile version