மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்கே.என் நேரு அவர்கள் காவிப்பொன்னாடை போர்த்தி விநாயகர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.
தி.மு.க தலைவர்கள் அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தார்கள் என்னதான் தேர்தலுக்காக “வேல்” எடுத்து நாடகம் போட்டாலும், நெற்றியில் பட்டையடித்து வலம் வந்தாலும் அவ்வபோது அவர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ள இந்துமத வெறுப்பு மட்டும் அகலாமல் நிலைகொண்டு வருகிறது.
ஆனால் தேர்தல் வந்தால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது தங்கை கனிமொழி ஆகியோர் இந்து மத அடையாளங்களை தேர்தல் பிரச்சாரத்திற்காக உபயோகபடுத்தி வந்தனர்.
மேலும் தமிழக முதலவர் ஸ்டாலின் தங்கை கனிமொழி சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள குடிசைத் தொழில்கள் அலுவலகத்தை பார்வையிட்டு அவர்களின் பரிசுகளை ஏற்றுக்கொண்டார்.
அப்பொழுது, திமுக மகளிர் பிரிவின் நகர அமைப்பாளர் அவருக்கு விநாயகர் சிலை ஒன்றை வழங்கினார், கனிமொழி வாங்க மறுத்து பிள்ளையாரை தள்ளி வைத்தார்.
விநாயகர் பற்றி உதயநிதியோ விநாயகர் சிலை வெறும் களிமண்ணில் செய்தது.கரைக்க எடுத்து சென்றுவிடுவார்கள் என்றார்.
இந்த நிலையில் மத்தியில் பாஜக இருப்பதால் அவர்களுடன் இணக்கமாக செல்வதற்க்கு மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்கே.என் நேரு அவர்கள் காவிப்பொன்னாடை போர்த்தி விநாயகர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்
பெரியார் கொள்கையில் இருக்கும் திமுக அமைச்சர் ஒருவர் விநாயகர் சிலையினை பரிசாக அளித்தது திக வால் சகித்து கொள்ள முடியவில்லை. இதுதான் திமுக. திமுகவிற்கு கொள்கை என்பது கிடையாது. ஆட்சி அதிகாரத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள் என இந்த சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
விநாயகர் சிலையை வீதிகளில் உடைத்த பெரியார் கும்பலில் இருந்து வந்த ஒருவர் அதே விநாயகர் சிலையை இப்பொழுது மத்திய அமைச்சருக்கு நினைவுப்பரிசாக வழங்குகிறார் என்றால் அவர்களே பெரியாரை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை எனபதை தான் இது சுட்டி காட்டுகிறது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















