குஜராத்தில் பல்வேறு முக்கிய ரயில்வே திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத் அறிவியல் நகரத்தி்ல் அமைக்கப்பட்டுள்ள நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் எந்திரவியல் காட்சியகங்கள் மற்றும் இயற்கை பூங்காவையும் அவர் திறந்து வைத்தார். காந்திநகர் கேப்பிடல்-வாரணாசி அதிவேக வாரந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் காந்திநகர் கேப்பிடல்-வரேத்தா இடையேயான மின்சார ரயில் சேவைகளையும் பிரதமர் துவக்கி வைத்தார்.
குஜராத்தில் மெஹ்சானா மாவட்டம், வாட் நகரில் உள்ள ரயில்வே நிலையத்தில் , பல ஆண்டுகளுக்கு முன், பிரதமர் மோடியின் தந்தை டீ கடை நடத்தி வந்தார். அப்போது இளம் வயது மோடி, தந்தைக்கு உதவியாக ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்து வந்தார். பிரதமரான பின், மோடி பலமுறை இதை நினைவு கூர்ந்துள்ளார். டீ விற்ற ரயில் நிலையத்தை மேம்படுத்தி மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பிரதமராக திறந்து வைத்துள்ளார் பிரதமர் மோடி. இதற்கு காரணம் விவரின் உழைப்பு மற்றும் பாஜக. என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், வாட்நகர் ரயில்வே ஸ்டேஷன், தற்போது ரூ. 8 கோடி செலவில் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு நிகரான வசதிகளுடன் புனரமைக்கப்பட்டடுள்ளது. இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி, காணொலி ‘ வாயிலாக திறந்து வைத்தார். இவற்றை தவிர புதுப்பிக்கப்பட்ட காந்திநகர் ரயில்வே ஸ்டேஷன், ஆமதாபாத் அறிவியல் நகரில் புதிய பிரிவுகள் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.
மேலும் அவர் பேசியதாவது : அவர் இந்தியா போன்ற பெரிய நாட்டில் ரயில்வே ஆற்றிவரும் பங்கு குறித்து பிரதமர் குறிப்பிட்டார். வளர்ச்சியின் புதிய பரிமாணங்கள் மற்றும் வசதியின் புதிய பரிமாணங்களை ரயில்வே கொண்டு வருவதாக அவர் கூறினார். கடந்த சில வருடங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகளின் விளைவாக வடகிழக்கு பகுதியின் தலைநகரங்களுக்கு முதன்முறையாக ரயில்கள் சென்றடைவதாக அவர் குறிப்பிட்டார். வாத் நகரும் இன்றைக்கு இந்த விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இணைந்துள்ளது. புதிய நிலையம் உண்மையிலேயே கவர்ச்சிகரமாக இருக்கிறது. வாத் நகர் ரயில் நிலையத்துடன் எனக்கு பல்வேறு நினைவலைகள் உள்ளன. புதிய அகல பாதை தடத்தை அமைத்ததன் மூலம் வாத் நகர்-மோதேரா-பதான் பாரம்பரிய பிரிவுக்கு தற்போது சிறப்பான ரயில் சேவை கிடைக்கும் என்று பிரதமர் கூறினார்.
நவீனமயம் மற்றும் ஏழைகள், விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் நலன் ஆகிய இரண்டு தடங்களில் மட்டுமே புதிய இந்தியாவுக்கான வளர்ச்சி வாகனம் முன்னேறி செல்ல முடியும் என்றும் பிரதமர் கூறினார்.