இஸ்லாமியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்துவதற்கு ஜமாத்தை ஆலோசிக்க வேண்டுமாம் !

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்ட இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்கு முன் தங்களை அரசு ஆலோசிக்க வேண்டும் என்று இஸ்லாமிய மதகுருமார்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதிகளான சத்ரான்ஜித்புரா மற்றும் மொமின்புரா ஆகிய இடங்களில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இஸ்லாமியர்களே எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இதனையடுத்து ஜாமியா அரேபிய இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த முகமது அப்துல் அசிஸ் கான் என்ற இமாம் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் சபாநாயகர் நானா பட்டோலே ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இஸ்லாமியர்களை க்வாரன்டைன் செய்வதற்கு முன் அந்தப் பகுதியில் உள்ள இஸ்லாமிய மத குருமார்களிடம் ஆலோசனையும் ,அனுமதியும் பெற வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அவர்களை குவாரண்டின் செய்வதை விட அவர்களுடைய வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தாலும் அவர்களை அழைத்து செல்வதற்கு முன் அந்த பகுதியில் இருக்கக்கூடிய மசூதி தலைவர்களோ, இமாம் அல்லது இஸ்லாமிய தன்னார்வ அமைப்புகளிடம் கலந்தாலோசித்த பின்னர் அவர்களின் நம்பிக்கை பெற்ற பின்பே அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இது ரம்ஜான் மாதம் என்பதால் தனிமைப்படுத்தப்பட்ட தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான உணவுப் பொருட்கள், தானியங்கள் ஆகியவற்றை போதிய அளவு அவர்களுக்கு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கிடையே இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் மகாராஷ்டிராவில் கோவிட்- 19 தொடர்பான இறப்பில் 44% இஸ்லாமிய மக்கள் என்பதாக தெரிவித்துள்ளது. அந்தப் பகுதியில் இஸ்லாமியர்களின் ஜனத்தொகை 12% சதவீதம்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவியதற்கு காரணம் டெல்லி தப்லீக் ஜமாத் மர்க்கஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பியவர்களால் என தெரிகிறது.மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்ட திரும்பிய பலர் தங்களுடைய பெயரை பதிவு செய்யாமல் மறைந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். கொரோனா தொற்று இஸ்லாமிய மக்களிடம் அதிகளவில் பரவி இருப்பதால் மருத்துவதுறை உதவியுடன் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்களை உருது மொழியில் அடித்து மக்களிடையே விநியோகம் செய்யப்படுவதாக செய்தி வருகிறது.

இதற்கிடையே பிவண்டியைச் சேர்ந்த இமாம் முவ்தி ஹஃப்யூஸ் காஸ்மி , இது ரம்ஜான் மாதத்தில் ஊரடங்கு கடைபிடிக்காமல் தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என காவல்துறையை எச்சரித்ததோடு, ஒரு வேளை காவல்துறை வழக்கு பதிவு செய்தால் அதனை தங்களால் சகித்துக்கொள்ள முடியாது என்பதுடன் அதற்கான பின்விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார்.

Exit mobile version