கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது இச்சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார் மக்கள் பலர் காயமடைந்தனர் இந்த நிலையில் குண்டுவெடிப்பு சம்பந்தமாக மத்திய குற்றப்பிரிவு அமைப்பு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நபர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தற்போது சென்னையில் என்ஐஏ-யின் சென்னை கிளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்சுராஜ் என்ற நகை வியாபாரியிடம், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் 282 கிராம் தங்க நகையை, இரண்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக யாசின் மற்றும் ரபிக் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களை தீவிர விசாரணை நடத்தியதில் ரபிக் என்பவன் அல்-உம்மா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவன் என தெரியவந்துள்ளது என்ஐஏ அமைப்பு தேடி வந்த தீவிரவாதி தான் இந்த ரபிக் சென்னையில் சென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ரபீக் கைது செய்யப்பட்டுள்ளது சென்னை மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















