மாமல்லபுரம் பெருமாள் கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கு உணவருந்தச் சென்ற பழங்குடியினத்தவரை அவமதிப்பதாகவும், அனைவருடனும் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கவில்லை. அறநிலையதுறையினர் என தமிழக அரசு மீது பழங்குடியின பெண் அஸ்வினி என்பவர் அண்மையில் பேட்டியளித்த வீடியோ வைரலாக பரவியது. ஜெய் பீம் வெளியாகும் நேரத்தில் இந்த வீடியோ வைரலானது.
அதன் பின் அறநிலைய துறை அமைச்சர் பழங்குடி இன பெண் அஸ்வினி அருகே உட்கார்ந்து அன்னதானம் சாப்பிட்டார். அந்த சம்பவமும் வைரலானது.பிறகு முதல்வர் ஸ்டாலின் களத்தில் இறங்குகிறார். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு செல்கிறார். அஸ்வினி பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார். இருளர் சமூகத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்குகிறார். கூடவே ஜெய் பீம் படம் பார்த்து விமர்சனம் செய்கிறார். எல்லாமே வைரலானது.
மேலும் இருளர் சமூகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் நலத்திட்டங்களை வழங்கினார். ஆனால் அதை தமிழக அரசு வழங்கியது போல் சித்தரிக்க தொடங்கிவிட்டார்கள். இது குறித்து தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் எஸ்.ஜி சூர்யா கூறியுள்ளதாவது; பிரதமர் மோடியின் கனவு திட்டமான முத்ரா திட்டத்தில் 12 நரிக்குறவர், இருளர் குடும்பத்திற்கு தலா ₹1 லட்சமும், பிரதமர் மோடியின் சிறுதொழில் வங்கிக்கடன் திட்டத்தில் 33 நரிக்குறவர், இருளர் குடும்பத்திற்கு தலா ₹10,000 என மொத்தம் ₹15,30,000 ரூபாயை பிரதமரின் சார்பில் இன்று செங்கல்பட்டில் வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது நன்றி.₹200 இணைய உ.பி-க்கள் இதற்கும் விடியா தி.மு.க அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்.
செங்கல்பட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர், இருளர் குடும்பங்களுக்கு நல திட்ட உதிவகளை வழங்கினார். அப்போது, மத்திய அரசின் Department of Atomic Energy(பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் துறை) கீழ் இயங்கும் மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷன்(MAPS) நிறுவனத்தின் #CSR நிதியில் இருந்து புதிய அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான ஆணையையும் சேர்த்து அம்மக்களுக்கு வழங்கினார்.
₹200 இணைய உ.பி-க்கள் இதற்கும் விடியா தி.மு.க அரசின் ஸ்டிக்கர் ஒட்டும் அயோக்கியத்தனத்தை முறியடிப்போம்.என கூறியுள்ளார்