இந்தியா – சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த வாரம் கல்வான் பகுதியில் இந்திய சீனா ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த லடாக் மோதலில் மொத்தம் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் மொத்தம் 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த நிலையில் சீனாவிற்கு எதிராகவே அந்நாட்டு மக்கள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். சீனாவின் சமுக வலைத்தளமான Weibo வில் அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள் கல்வான் சண்டையில் எத்தனை சீன வீரர்கள் பலியானார்கள் என்ற விவரத்தினை சீனா அரசு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இது குறித்து மக்கள் அவர்களின் சமூக வலைத்தளமான Weibo இணையத்தில் கேள்விகளை கேட்டு வருகின்றார்கள்.
அவர்களின் கேள்விகள் , இந்தியாவில் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்று வெளிப்படையான விவரம் வெளியாகி உள்ளது. 20 வீரர்களின் பெயர்களை கூட அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள். அதோடு நாடு முழுக்க அதற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். மேலும் அவர்களுக்கு ராணுவ மரியாதையுடன் இரங்கல் தெரிவித்து இறுதி சடங்கு நடத்தி உள்ளனர். ராணுவ வீரர்களுக்கு உரிய மரியாதை செலுத்தியுள்ளார்கள்
ஆனால் சீனா இதை பற்றி எதுவும் சொல்லவில்லை. ஏன் எத்தனை வீரர்கள் காயம் அடைந்தனர் கூட சொல்லவில்லை. சீனா தனது வீரர்களை மதிக்கவில்லை. இந்தியாவிடம் பார்த்து சீனா கற்றுக்கொள்ள வேண்டும் . என சீனா அரசிற்கு அறிவுரை வழங்கி வருகிறார்கள்!
மேலும் விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் இந்தியா உண்மையை சொல்கிறது. ஆனால் சீனாவிடம் அந்த நேர்மை இல்லை சீனாவிற்க்காக ஏன் தியாகம் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு மக்களே சீன அரசை கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். சீன ஊடகங்கள் அதிகப்படியான பொய்யைக் கொண்டிருப்பதாகவும், அதில் நிறைய நம்பகத்தன்மை இல்லை என்றும் கூறினார்