மேற்கு வங்கத்தில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தின.போராட்டங்கள் நடந்து வருகின்றன. மக்கள் தன்னெழுச்சியாக வந்து அங்கே போராடி வருகின்றனர்.கொல்கத்தாவில் நடந்த பலாத்காரம் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் நடந்த நிர்பயா சம்பவத்திற்கு இணையாக மிகப்பெரிய கொடூரம் கொல்கத்தாவில் நடந்து உள்ளது. நேற்று பெங்களூர், டெல்லி, மும்பை, புனே தொடங்கி நாடு முழுக்க பெண்கள் , ஆண்கள் இதை எதிர்த்து கூட்டம் கூட்டமாக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். கொல்கத்தா மக்கள் இடையே அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் அங்கே மம்தா அரசுக்கு எதிராகவும் திரும்பி உள்ளது. மேலும் இந்த வழக்கு சி.பி ஐ க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகிரார்கள்
ஆர்ஜி கர் மருத்துவமனையில் கடந்த ஆக. 9ம் தேதி பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்த போது அப்போது சந்தீப் கோஷ் தான் முதல்வராக இருந்தார். அப்போது அவரது செயல்பாடுகள் பல சர்ச்சைகளைக் கிளப்பின. பயிற்சி மருத்துவர் கொலை குறித்து புகார் கூட அளிக்காதது, முதலில் அதைத் தற்கொலை எனக் கூறி மறைக்கப் பார்த்தது என அவர் மீது பல புகார்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கும் மம்தா அரசிற்கும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்தில் சி.பி.ஐ விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் நவராத்திரி சமயத்தில், மேற்கு வங்கத்தில் ஒன்பது நாட்களும் காளிக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.இந்த மாநிலத்தின் ஒவ்வொரு நகரிலும், கிராமத்திலும் பெரிய பந்தல் அமைத்து, காளி தேவி சிலையை வைத்து பூஜை செய்வர்; நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் அன்னதானம் நடக்கும்.மேற்கு வங்க கிராமிய நடனங்கள் நடைபெறும். கோல்கட்டாவின் ஒவ்வொரு பகுதியிலும், ஒரு முக்கிய இடத்தில் பெரிய பந்தல் அமைப்பர்.அந்த சமயத்தில், நாட்டில் எந்த விவாகரம் பரபரப்பாக பேசப்படுகிறதோ, அதை அந்த பந்தலின் வைத்து விடுவர்.
இந்த முறை கோல்கட்டாவின் பூஜா பந்தல்களில், இளம் மருத்துவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பந்தல்களில் தீம் அமைக்கப்பட உள்ளதாம்; இது, மம்தா கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.’இந்த முறை பந்தல் அமைக்க அரசு தரப்பிலிருந்து, 75,000 ரூபாய் வழங்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளதாம். ஆனால், ‘எங்களுக்கு உங்கள் பணம் வேண்டாம்’ என, பூஜா பந்தல் நடத்துவோர் மறுத்து விட்டனராம்.
அனைத்து அரசியல் கட்சியினரும், இந்த விஷயத்தில் மம்தாவிற்கு எதிராக உள்ள நிலையில், ‘நவராத்திரி சமயத்தில், பந்தல் தீம் விவகாரமும் தங்களுக்கு எதிராக உள்ளதே’ என, மம்தா அதிர்ந்து போயுள்ளாராம்.
மேலும் ஹிந்துக்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் ஒன்றிணைத்துள்ளது தான் பெரும் அதிர்ச்சியாம். அதுமட்டுமல்ல மருத்துவர் பலாத்கார விஷயம் நாடு முழுவதும் மம்தாவுக்கு எதிரான நிலையை கடைபிடித்து வருவதனால் நடைபெற உள்ள மூன்று மாநில தேர்தலில் இண்டி கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக என அரசியல் வல்லுநர்கள் கூறிவருகிறார்கள். இதனால் இண்டி கூட்டணி மம்தாவை ஓரங்கட்ட காய் நகர்த்தி வருகிறதாம்.
இந்தநிலையில் திரிணாமுல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி ஜவஹர் சிர்கார் திடீரென பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் மம்தாவுக்கு எழுதிய கடிதத்தில், பெண் டாக்டர் கொலை சம்பவத்தில் மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறியதாகவும், கொலையில் தொடர்புடையோர் உடனடியாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டினார். தனது அனுபவத்தில் அரசுக்கு எதிராக இத்தகைய நம்பிக்கையின்மையை பார்த்ததில்லை என்றும் ஆதங்கப்பட்டுள்ளார். மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற போராட்டங்கள் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட இருப்பதையே தெரிவிக்கிறது.