உலகத்திற்கு ஏதோ நடக்க கூடாதவை நடக்க போகிறது என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு துர் சகுனங்கள் அவ்வப்போது தோன்றும். மஹாபாரதத்தில் விதுரர் இவைகளைப் பற்றி விலாவாரியாக விளக்கி உள்ளார். அவற்றில் ஒன்று தான் வால் நட்சத்திரம் தோன்றுவதும்.ராமாயணத்தில் ராவணன் பிறப்புக்கு முன்பு வானத்தில் வால் நட்சத்திரம் தோன்றி வரப்போகும் பேராபத்தை முன்கூட்டியே அறிவித்தது.மஹாபாரதத்தில் குருக்ஷேத்ர போருக்கு முன்னதாக வால் நட்சத்திரம் ஒன்று பூச நட்சத்திரத்தை பீடிப்பதால் பெரும் நாசம் விளையப் போவதாக கர்ணன் கிருஷ்ணனிடம் கூறுகிறான். பைபிளில் இயேசு பிறப்பை வானில் தோன்றிய வால் நட்சத்திரம் ஒன்று உணர்த்தியதாக (லூக்கா 2:10) கூறப்படுகிறது.
கொரோனா, தேச விரோத போராட்டங்கள், அம்ஃபன் புயல் என்று ஏற்கனவே உலகமே அல்லாடும் தருணத்தில் ஸ்வான் என்றொரு பச்சை நிற வால் நட்சத்திரம் தற்போது தோன்றி உள்ளது. கடந்த கால அனுபவங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்தால் மூன்றாவது உலகமஹா யுத்தம் ஏற்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.
அதற்கேற்றாற் போல் இப்பொழுது இந்திய – சீன எல்லையில் போர் பதட்டம் நிலவுவதால், அந்த எண்ணத்திற்குக் கூடுதல் பலம் ஏற்படுகிறது. ஒரு வேலை ஆயுதப் போராக இல்லாமல் போனாலும் வர்த்தகப் போரால் உலகம் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகும் எனலாம். மேலும், சீனாவில் ஒவ்வொர் அறுபது வருடத்திற்கொரு முறை பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்கள் பெரியளவில் நிகழ்ந்து வந்திருக்கின்றன.
1960 பெரிய உணவுப் பஞ்சமும் அதைத் தொடர்ந்து அரசியல் சிரமங்களும் நிகழ்ந்த்து. தி கிரேட் சைனீஸ் ஃபாமைன் என்று தேடிப் பார்க்கலாம். சரியாக அறுபது வருடங்களுக்கு முன் அதாவது 1900ல் பாக்ஸர் ரிபெல்லியன் எழுச்சி நிகழ்ந்து போரின் மூலம் பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்த்து. அதே போல் 1840ல் தி செகண்ட் ஓபியம் வார் என்ற பெயரில் சீனாவை ஐரோப்பிய நாடுகள் புரட்டி எடுத்ததையும் நினைவில் கொள்ளலாம். ஆகவே, இந்த வால் நட்சத்திரம் மற்றும் சீனாவின் அறுபது வருட செண்டிமெண்ட்களைக் கணக்கில் கொண்டால், இன்றைய பொருளாதார மற்றும் அரசியலில் உலகின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றாக இருக்கும் சீனாவில் மாற்றம் ஏற்பட்டால் அது உலகலாவியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தோன்றுகிறது.
மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் தற்சமயம் காட்சியளிக்கும் வால் விண்மீன் 11,600 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி அளிக்கும். கலியுகம் தொடங்கி 5122 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆகவே இதற்கு முன் துவாபர யுகத்தில் காட்சி அளித்து இருக்கிறது. கண்ணனும் கர்ணனும் பாண்டவர்களும் கௌரவர்களும் கண்ட வால் நட்சத்திரத்தை நாமும் இந்த யுகத்தில் முதலில் பார்க்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறோம்.
ஏற்கனவே 86 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் ஹாலி வால் நட்சத்திரத்தை 1986 ல் கண்டிருக்கலாம். அதிலிருந்து பத்து வருடங்களுக்கு பிறகு Comet Hyakutake என்ற வால் நட்சத்திரம் 1996 மார்ச் மாதம் பூமிக்கு மிக அருகாமையில் வந்தது. அது ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது. தற்போது முதல் இந்த மே மாத இறுதி வரை அதிகாலை 4.00 – 5.00 மணிக்குள் தென்திசை அடிவானத்தில் இதனை காண முடியும்.
வால் நட்சத்திரம் தோன்றுவதால் உலகத்தில் பேரழிவு ஏற்படும் என்பதும் அதை பார்ப்பது அபசகுனம் என்றும் கூறப்பட்டாலும் அபூர்வமான இந்த நிகழ்வுகளை காண்பதில் ஓர் அலாதியான மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.
எழுத்தாளர் : Vedhakkaran Iyappan Iyappan
நன்றி : சஞ்சிகை 108
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















