வட கொரியாவில் கிம் ஜாங் உன் மரணம் பற்றிய அறிவிப்புகள் தள்ளி போக கார ணம் அதிபர் பதவிக்கு நிலவும் அதிகார போட்டி தான் முக்கிய காரணமாக இருக்கிறது. கிம் ஜாங் உன்னின் தங்கையான கிம் யோ ஜாங் தான் அதிபர் பதவிக்கு வருவார் என்று வட கொரியாவின் மீடியாக்கள் கூறி வரும் நிலையில் கிம் ஜாங் உன்னி ன் சித்தப்பா கிம் ப்யாங் இல் அவர்களும் அதிபர் பதவியை கைப்பற்ற போராடி
வருகிறார்.
இந்த கிம் ப்யாங் இல் வேறு யாருமல்ல.வட கொரியாவை தோற்று வித்து முதல் அதிபராக இருந்த கிம் இல் சுங்கின் 5 வது மகன் ஆவார். அதாவது வட கொரியாவின் 2 வது அதிபராக இருந்த கிம்ஜாங் கின் உடன் பிறந்த தம்பி ஆவார்.
கிம் இல் சுங்கிற்கு மொத்தம் 6 மகன்கள் இதில் கிம் ஜாங் இல் முதல் மகன் கிம்ப்யாங் இல் 5 வது மகன் .இவர் தன்னுடைய பாதி வாழ்க்கையை வட கொரியாவின் தூதராக வெளி நாடுகளில் கழித்து விட்டவர். இப்பொழுது தான் வட கொரியா வுக்கு வந்து இருக்கிறார்.
2011 டிசம்பரில் கிம் ஜாங் உன்னின் அப்பா கிம் ஜாங் இல் மரணம் அடைந்த பிறகு அடுத்த வட கொரியா அதிபராக இவர்தான் வர விரும்பினார். ஆனால் கிம்ஜாங் உன்னுக்கு வட கொரியாவின் ராணுவம் குடும்ப கட்சியான வொர்க்கர்ஸ் பார்ட்டியின் ஆதரவு இருந்ததால் அதிப ராக வந்து விட்டார்.
அதனால் இந்த முறை எப்படியாவது கிம்ப்யாங் இல் வட கொரியா அதிபராக வர தீயாக வேலை செய்து வருகிறார். இவருக்கு அமெரிக்கா மற்றும் தென் கொரி யாவின் அமோக ஆதரவு இருக்கிறது அமைதியான மனுசன் பல நாடுகளின் தூதராக இருந்ததால் உலக அரசியல் அறிவு அதிகம் இருக்கிறது. இதனால் தனிமை பட்டு இருக்கும் வட கொரியாவை உலக நாடுகளுடன் இணைக்க வைப்பார். இவர் வந்தால் வடகொரியாவின் அரசியல் நிச்சயமாக மாறும். ஆனால் இவருக்கு வட கொரியாவின் கொரிய மக்கள் ராணுவத்திலும் ஆளும் கட்சியான வொர்க்கர்ஸ் பார்ட்டியின் பொலிட் பீரோ அமைப்பிலோ பெரி ய அளவில் ஆதரவு இல்லை.
ஆனால் கிம் ஜாங் உன்னின் தங்கையான கிம் யோ ஜாங்கிற்கு கட்சி மற்றும் ராணுவ மட்டங்களில் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கிம் ஜாங் தன்னுடைய தங்கையை தான் அடுத்த வாரிசாக கட்சி மற்றும் ராணுவ மட்டங்களில் வளர்த்து வந்தார்.
அதனால் வெளிநாட்டு ஆதரவு கிம் ஜாங் உன்னின் சித்தப்பா கிம் ப்யாங் இல்லிற்கும் உள்நாட்டு ஆதரவு தங்கையான கிம்யோ ஜாங்கிற்கும் இருக்கிறது. இந்த அதிபர் பதவி பிரச்சனை முடிந்தவுடன் கிம்ஜாங் உன்னின் மரணம் பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வரலாம்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















