திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பிரதமராக இருந்த திரு.மன்மோகன் சிங் அவர்கள், காஷ்மீர் மாநிலத்திற்கு செல்ல முடியாத நிலையில், காஷ்மீர் பயங்கரவாதிகளின் அட்டூழியம் எல்லை மீறி நிகழ்ந்தது.
சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீர் மாநிலம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருந்தது. இதற்கு முக்கிய காரணம், மத்தியில் நீண்ட காலம் ஆட்சியில் இருந்த காங்கிரசும், அதனோடு நீண்டகாலம் கூட்டணி தோழனாக இருந்த திமுகவுதான்.
2019-ஆம் ஆண்டு, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் துணிச்சல்மிக்க நடவடிக்கையால், காஷ்மீர் மாநிலத்திற்கு தனி அந்தஸ்து வழங்கிய 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. அதுவரை பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக இருந்த காஷ்மீர் மாநிலம், 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டபிறகு அமைதிப் பூங்காவாக மாறியது. அங்கு இப்போது முஸ்லீம் பயங்கரவாதிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விட்டனர்.
இதன் காரணமாக பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள், காஷ்மீர் மாநிலம் நோக்கி படையெடுத்துவருகின்றனர். சுற்றுலா பயணிகளும் மீண்டும் காஷ்மீர் செல்லத் தொடங்கியுள்ளார்கள். அவர்கள் காஷ்மீர் இயற்கை அழகை கண்டு களித்து செல்கின்றனர்.
அதோடு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா அவர்களுக்கும் மறக்காமல் நன்றி பாராட்டி திரும்புகின்றனர்.
காஷ்மீர் மாநிலத்தின் இயற்கை எழிலை கண்டு ரசிப்பதற்காக தமிழகத்திலிருந்து திராவிட ஸ்டாக் சிலர் சென்றுள்ளனர். அதில் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் செந்தில்குமார் ஆகிய எம்பிக்கள் முக்கியமானவர்கள்.
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் பேத்தியாக தன்னை காட்டிக் கொள்ளும், தமிழச்சி தங்கப்பாண்டியன், காஷ்மீர் ஹஸ்ரத்பால் மசூதியில் ஒரு முஸ்லிம் பெண்ணாக தன்னை மாற்றிக்கொண்டு, மண்டியிட்டு தொழுகை நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ந்திருந்தார்.
அவருக்கு ஒரு படி மேலே போய், தர்மபுரி தொகுதி எம்.பி செந்தில்குமார், அங்குள்ள ஸ்ரீநகர் சங்கராச்சாரியார் கோயிலில், சங்கராச்சாரியார் சிலை முன்பு, அந்த மகானை அவமதிக்கும் வகையிலும், ஒட்டுமொத்த இந்துக்களையும் புண்படுத்தும் வகையிலும், கால் மேல் கால் போட்டு அமர்ந்து போட்டோ எடுத்து, அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தான் ஒரு அக்மார்க் இந்து விரோதி என்பதை 100 சதவீத உறுதியுடன் வெளிப்படுத்தி உள்ளார்.
ஆனால் காஷ்மீர் ஹஸ்ரத்பால் மசூதியில் அவர் தொழுகை நடத்திய பகுத்தறிவு போட்டோவை ஏனோ வெளியிடவில்லை.
இதனை கவனித்த நெட்டிசன்கள், செந்தில்குமாரை வறுத்தெடுத்துவிட்டனர்.
எது எப்படியோ, காங்கிரஸ் பிரதமரால்கூட செல்ல முடியாமல் இருந்த காஷ்மீர் மாநிலத்தின் நிலைமையை, ஈரோடு ராமசாமி நாயக்கரின் வாரிசுகள் கூட எளிதாக சுற்றுலா செல்லும் தலமாக மாற்றிய பெருமை, பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களையே சாரும்.
பண்பாடு தெரிந்தவர்கள், பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.
அதையெல்லாம் திராவிட ஸ்டாகிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்?