தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சி வந்தால் பல்வேறு வாக்குறுதி வழங்கப்பட்டன. அதில் நீட் தேர்வுக்கு தடை வேறு பல வாக்குறுதிகளை அதில் சிலிண்டருக்கு 100 குறைப்பு, மகளீருக்கும் மாதம் 1000 ருபாய் வழங்கும் திட்டம், ஏற்கனவே முதியோருக்கு 1000 ருபாய் வழங்கப்பட்டது அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாயாக வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. தேர்தலுக்கு முன் தாங்கள் தேர்தல் அறிக்கையில் மாநில அரசுக்கும் வரும் வரி வருவாயில் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும் டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்றார்கள்
மேலும் திமுக ஆட்சியமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக ஊர் ஊராக சுற்றினார் ஸ்டாலின் அவர்கள். கிராமங்கள் தோறும் மனுக்களை வாங்கி குவித்தார். பெறப்பட்ட அந்த மனுக்களை வாங்கி ஒரு பெட்டிக்குள் போட்டு, பூட்டு போட்டார். பூட்டின் சாவியை அவரே வைத்துக்கொண்டார்., திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 100 நாட்களில் மக்களிடம் பெறப்பட்ட இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்தார்.பின்னர், திமுக ஆட்சியமைந்ததும், இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க தனி அதிகாரியையும் முதலமைச்சர் ஸ்டாலின் நியமனம் செய்தார்.
இந்த நிலையில், திமுக ஆட்சியமைந்ததும் 100 நாட்களில் மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதாக வாங்கிய கடிதங்கள் என்னவாகியது என்று திமுகவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவ அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு முடிந்துவிட்டது.
என்னவானது தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்சினைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?,” எனக் குறிப்பிட்டுள்ளார். திமுகவை தீடிரென சீண்டியுள்ளார் சீமான்.