நமது பகுதி சிகப்பில் இருந்தாலும் சரி ஆரஞ்சில் இருந்தாலும் சரி…
கடைகள் திறந்தாலும் சரி திறக்கப்படவிட்டாலும் சரி…..
ஊரடங்கு சட்டம் தளர்ந்தாலும் சரி தளராவிட்டாலும் சரி…..
ரோட்டில் போலீஸ் உங்களை தடுத்தாலும் சரி தடுக்காவிட்டாலும் சரி…
அரசாங்கம் உத்தரவு போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி…
மீடியாக்கள் கொரோனவை பற்றி பேசினாலும் சரி பேசாவிட்டாலும் சரி..
ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்…. உங்களை காப்பாற்றி கொள்வதும் உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதும் இந்த மொத்த சமுதாயத்தை காப்பாற்றி கொள்வதும் உங்கள் கையில் தான் உள்ளது…
இது ஒரு Pandemic – உலகளாவிய கிருமி பரவல்.நீண்ட காலம் இருக்கும், பின்னர் இங்கொன்று அங்கொன்று என அடுத்த ஐந்து வருடங்களாவது இருக்கும். அதற்குள் தடுப்பூசி, மருந்துகள் வந்து, இது ஒரு மேட்டரே இல்லை என்ற நிலைக்கு வந்து பின்னர் பொத்தென இல்லாமல் போய் விடும்.
கடைகளில் முண்டி அடிக்க வேண்டாம்…
லிஃப்டில் கூட்டம் இருந்தால், படிக்கட்டு வழியாக ஏறவும்/இறங்கவும்…
லிஃப்ட் பட்டனை வண்டி சாவி கொண்டு அழுத்துங்கள்….
பொதுவெளியில் மற்றும் ஆபீஸில் முழு நேரமும் மாஸ்க் அணியுங்கள்….
அவசியம் ஏற்பட்டால் ஒழிய மாஸ்கை கழற்ற வேண்டாம்….
வீட்டில், ஆபிசில் சானிடைசர் எப்போதும் உடன் இருக்கட்டும்……
கண்ணை கசக்குவது, மூக்கு நோண்டுவது, வாயில் சொரிவது,முகத்தில் கை வைப்பது போன்றவற்றை அறவே விட்டு விடுங்கள்…..
எச்சில் துப்பாதீர்கள்…..
கர்சீப் வைத்து தும்முங்கள்/இருமுங்கள்…
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி கையை சுத்தப் படுத்தவும்….
கும்பல் கூடுவதை தவிருங்கள்…….
முடிந்தவரை 3-6அடி வரை தள்ளி நில்லுங்கள்..
அலுவலகம்,வீடு,கடை என்று அருகே இருந்தால் நடந்தே செல்ல பழகுங்கள்…
ஆட்டோ, ஷேர் ஆட்டோ, டாக்சி, பஸ்,ட்ரெயின் என்று பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது கவனமாக இருங்கள்…
தியேட்டர், மால்,ஹோட்டல், கேளிக்கை போன்றவை சிலகாலம் வேண்டவே வேண்டாம்.
திருமணம், பர்த்டே பார்ட்டி, ஆகியவை தவிர்க்க முடியவில்லை என்றால் சமூக இடைவெளி அவசியம்… வாய்பிருந்தால் தொலைவில் இருந்து மொய்/வாழ்த்து/அன்பளிப்பு அனுப்பலாம்.
பேச்சுலர்ஸ் போன்ற ஹோட்டல் அவசியமாக பயன்படுத்த வேண்டியவர்கள் ஓரமாக தனி டேபிளில் சாப்பிடவும். அப்போது தயார் செய்யப்பட்ட உணவை மட்டுமே சாப்பிடவும்.
முடிந்தவரை கடைகளுக்கு செல்வதை தவிர்க்க மளிகை,பால்,காய்கறி என்று எதெல்லாம் ஹோம் டெலிவரி கிடைக்க வாய்ப்புள்ளதோ அதை பயன்படுத்தி கொள்ளவும்..
வழிபாட்டு தளங்களில் 3-6 மீட்டர் இடைவெளி விட்டு ஜாக்கிரதையாக செல்லவும்…
கிளினிக்/மருத்துவமனைகளுக்கு மாஸ்க் சானிடைசர் இல்லமால் செல்ல வேண்டாம்….
ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்….
வேறு ஒருவரால் நமக்கு நோய் தொற்று வந்தாலும் சரி, நம்மால் வேறு ஒருவருக்கு நோய்த்தொற்று வந்தாலும் சரி…அவர்கள் வாழ்நாள் முழுதும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















