தண்டையார் பேட்டை, திருப்பூர், கயத்தார் போன்ற பல இடங்களில் ஊரடங்கை மீறி அல்லது எதிர்த்து ‘பொதுமக்கள்’ போராட்டம் என்று பல ஊடகங்களில் இந்த செய்தியே வெளியிடாத நிலையில், சில ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. ஆனால் இந்த போராட்டத்திற்கு பின் உள்ளவர்கள் யார்? யாருடைய, எந்த அமைப்புகளின் பின்னணியில் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன? பெண்களும் , குழந்தைகளும் அதிக அளவில் இந்த போராட்டங்களில் காணப்படுவது ஏன்? என்பது குறித்து விளக்கமாக கூற மறுக்கின்றன ஊடகங்கள்.
‘ஒரு சமுதாயத்தை’ குறி வைத்து தாக்க கூடாது’ என்று பிரதமர், அமைச்சர்கள், தலைவர்கள் என அனைவரும் கூறி வருவது ஏற்புடையதே. ஆனால், ‘ஒரு சமுதாயம் மட்டும்’, குறி வைத்து தாக்குவதை அனுமதிக்க கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியர்கள் அனைவரும் ஒன்று தான் எனும் நிலையில், ஒரு சமுதாயம் மட்டும் தங்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு வேண்டும் என்று கேட்பதும், தனிமைப்படுத்தலுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று சொல்வதும், கட்டுப்பாடுகளை மதிக்க மாட்டோம் என்று அலட்சியப்படுத்துவதும், மதசடங்குகளுக்கு ஊரடங்கை தளர்த்த வேண்டும் என்று போராடுவதும் எந்த விதத்திலும் முறையல்ல. தமிழக அரசு மத நல்லிணக்கத்தை பேணிக்காக்க வேண்டும் என்கிற அதே நேரத்தில், ஒரு சிலரின் மத அடிப்படைவாத அராஜக போராட்டங்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மத சார்பற்ற அரசு அடிப்படை மதவாதத்தின் விளைவுகள் அறிந்து செயல்படவேண்டும்.
(குறிப்பு : நான் எந்த சமுதாயத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை. இந்த பதிவை யார் விமர்சித்தாலும் அது அவர்களால் தான் என்பதை உணர்த்தும்).
கட்டுரை:- நாராயணன் திருப்பதி பாரதிய ஜனதா கட்சியின் செய்திதொடர்பாளர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















