Friday, January 30, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

யார் இந்த தலைவன் நரேந்திர தாமோதரதாஸ் மோதி! உலகம் முழுவதும் தனி ஒருவனின் ராஜ்ஜியம் !

Oredesam by Oredesam
September 17, 2020
in இந்தியா, செய்திகள்
0
யார் இந்த தலைவன் நரேந்திர தாமோதரதாஸ் மோதி! உலகம் முழுவதும் தனி  ஒருவனின் ராஜ்ஜியம் !
FacebookTwitterWhatsappTelegram

உலக வரலாற்றில் மிகத் தொன்மையான பாரதத்தில் சறுக்கல் ஏற்படும் பொழுதெல்லாம், பாரதத் தாய், தன் தேசக் குழந்தைகளைக் காக்கத் தகுதியான திறன்மிகுந்த புத்திரர்களைப் பெற்றுக் கொள்கிறார்.அறம் சரிந்த பொழுது திரு வள்ளுவனையும், மறம் சரிந்த பொழுது சத்ரபதி சிவாஜியையும்,உரிமை சரிந்த பொழுது, காந்தி, சுபாஷ்,திலகர், பாரதி போன்றோரையும்,ஆன்மா தளர்ந்த பொழுது, விவேகானந்தர், ரமணர், போன்றோரையும் ஈன்றெடுத்து சரிவைச் சரிகட்டிக் கொள்வது வழக்கம்.

நாடெல்லாம் ஊழல்கள், ஊரெல்லாம் குண்டுவெடிப்புகள் என இந்தியா நிலைகுலைந்து கலங்கியிருந்தது. அந்நிய சக்திகள் ஏகபோகமாக தலையினை விரித்து போட்டு இங்கு ஆடிகொண்டிருந்தன‌ இனி இந்தியாவில் மாநில கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் நடக்கும், அது வளர்ந்து தேசம் உடையும் என கணித்து கொண்டிருந்தன உலக நாடுகள்அப்பொழுதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது,.

READ ALSO

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

தேசம் குஜராத்தின் முதலமைச்சராக பலமுறை இருந்த மோடியிடம் ஆட்சியினை கொடுத்ததுமோடி ஒன்றும் சும்மா ஊர்சுற்றிவிட்டு சட்டென பிரதமர் நாற்காலிக்கு வரவில்லை, அவர் 10 வயதில் இருந்தே நாட்டுக்காய் உழைக்க வந்தார், அந்த ஆர்வம்தான் அவரை குஜராத் முதல்வராகிற்றும் அந்த ஆர்வம்தான் அவரை நிரந்தர முதல்வராகவும் வைத்திருந்ததுபின் பிரதமராக அவர் அமர்ந்தபொழுது அவருக்கு முன் ஏகபட்ட சவால்கள் இருந்தன, அவர் ஆட்சிக்கு மிகபெரும் அவபெயர் உண்டாக்கி, அந்த பெரும்பான்மையினையே செல்லா காசாக்க பெரும் திட்டமெல்லாம் இருந்ததுஉலகமும் முதலில் அவரை அச்சத்துடனே நோக்கியது., நிச்சயம் குஜராத் கலவரங்களை அவர் தொடங்கவில்லை, ரயிலை யார் எரித்தார்கள் என்பதெல்லாம் விடையற்ற கேள்விகள். மோடி கலவரத்தை அடக்கினார்

அதில் இந்துமக்களும் கொல்லபட்டனர், ஏராளம் கொல்லபட்டனர் எனினும் மோடிக்கு எதிரான சக்திகள் பிம்பத்தை மாற்றி வைத்திருந்தன‌அதை மாற்ற ஒவ்வொரு நாட்டின் படியாக ஏறி இறங்கினார், நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல அதேநேரம் இந்திய நலன்களை விட்டுகொடுப்பவரும் அல்ல என ஒவ்வொரு நாடாக நேரில் போய் சொன்னார்.

அது நாட்டுக்கு பலனளித்தது, கூர்ந்து கவனித்த நாடுகள் மோடி ஆட்சியில் கவலரமோ குண்டுவெடிப்போ இல்லை இதர மத துவேஷங்களோ இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு அவருக்கு நட்புகரம் நீட்டின‌.மெல்ல மெல்ல ஒவ்வொரு காரியமாக செய்ய தொடங்கினார் முதல் காரியமாக அவர் மூன்று அடிதளங்களை இட்டார், வெளிநாட்டில் இருந்து வரும் அச்சுறுத்தல் உள்நாட்டில் இருக்கும் குழப்ப வாதிகள், பொருளாதாரத்தை அரிக்கும் முதலைகள்இந்த மூன்று முக்கிய கொள்கைகளில் கவனம் செலுத்தினார், முதல் சில வருடங்கள் இதை அமைதியாக செய்தார், பின் என்ன செய்யவேண்டும் யாரை வைத்து செய்யவேண்டும் என திட்டமிட்டார்.

மோடியின் மிகபெரும் வெற்றி என்பது மிக சரியான ஆட்களை கண்டறிந்து அவர்களுக்கு பொறுப்பினை கொடுப்பது, அதை செய்தார்ஒவ்வொரு திட்டமும் செயல்பட ஆரம்பித்தன, அவரின் அதிரடிகள் மெல்ல தொடங்கின. ஓசையின்றி அந்த சீர்திருத்தம் மெல்ல தொடங்கிற்று, பின் விஸ்வரூபமெடுத்ததுமுதலில் உலக அரங்கில் இந்தியாவுக்கு நற்பெயர் ஏற்பட்டது, அந்நாடுகள் இந்தியாவின் நலனுக்கு துணை நின்றன பல உதவிகள் கிடைக்க தொடங்கின.
‌
இரண்டாவது இந்திய உள்நாட்டு குழப்பவாதிகள் அடக்கபட்டனர், தொண்டு நிறுவணம் எனும் பெயரில் வந்த பணம் நிறுத்தபட்டது, நீண்டகாலமாக விசாவோடு இல்லை விசா இல்லாமல் சத்திரத்தில் தங்கியது போல் தங்கியிருந்த அந்நியர் விரட்டபட்டனர், இதனால் தேவையில்லா போராட்டம் குறைந்ததுகருப்பு பண ஒழிப்பு என அவர் செய்த நடவடிக்கையே இங்கு வங்கிககளை தொழிலதிபர்கள் செல்லரித்தது போல் அரித்து கொண்டிருந்ததை காட்டின, அதை சரிசெய்யும் பொழுதுதான் மாய தொழிலதிபர்களின் போலி பிம்பங்கள் உடைந்தன, யாரெல்லாமோ அலறி அடித்து ஓடினார்கள்.

ஆம், எந்த ஆட்சி என்றாலும் எங்களை அசைக்க முடியாது என சொல்லி கொண்டிருந்தோரெல்லாம் அலறி அடித்து ஓடினர், வங்கிகளுக்கு வரவேண்டிய பணம் வந்தது மோடி அம்பானி ஆதரவாளரெல்லாம் அல்ல, முகேஷ் அம்பானி கூட திவால் நிலைக்கு வந்திருந்தார், பாரபட்சம் என்பதெல்லாம் மோடியிடம் இல்லை மோடியின் அதிரடி அவரின் முதல் ஆட்சியின் கடைசி காலத்தில் தொடங்கியது, பாகிஸ்தானுக்குள் யுத்த காலம் அல்லாமல் புகுந்து அடித்த முதல் பிரதமர் அவர்தான். அதில் அலறிய பாகிஸ்தான் அதன் பின் தன் வீரியத்தை குறைத்தது.

மோடியின் மிகபெரிய சாதனை நடக்கவே நடக்காது என உலகம் நம்பியிருந்த, எந்த பிரதமராலும் தீர்க்க முடியா காஷ்மீர் சிக்கலை தீர்த்தது. அது வரலாற்று அதிசயம், இந்திய சுதந்திரம் போல அது மிகபெரும் வரலாற்று நிகழ்வுகாஷ்மீரில் கைவைத்தால் விஷயம் பாகிஸ்தானோடு அல்ல, சீனாவோடு மோதவேண்டி வரும் என்பதாலே எல்லா பிரதமரும் தயங்கினார்கள். மோடி அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டுத்தான் காரியத்தை செய்தார்.

காஷ்மீரை சேர்த்து கலவரங்களை அடக்கி பின் லடாக்கில் கவனம் செலுத்தி அதிலும் பல பகுதிகளை இன்று மீட்டு சீனாவினை முதல் ஆசிய நாடாக அடக்கி வைத்திருக்கின்றது இந்தியாசீன எல்லைக்கே சென்று இது எங்கள் மண் என சீறிநின்ற மோடி உலகின் மிக தைரியமிக்க தலைவர்களில் ஒருவராக நின்றதை உலகம் குறித்து கொண்டது.

மோடியின் ஆகபட்ச சாதனை என ராமர்கோவிலை சொல்லலாம், கிட்டதட்ட 500 ஆண்டுகால சிக்கல் அது. எத்தனையோ மன்னர்களும் சர்வாதிகாரிகளும் சுதந்திர இந்திய பிரதமர்களும் செய்ய முடியா சாதனையினை அவர் செய்தார்காலம் அவருக்கான வாய்ப்பினை கொடுத்தது.

அந்த வாய்ப்பையும் பலாத்காரமாகவோ, கலவரத்திலோ அவர் செய்யவில்லை முழு அமைதியுடன், மிக மிக பாதுகாப்பான தேச சூழலில் அதை செய்தார், அது மிகபெரும் அதிசயம்ராமர் கோவிலுக்கான அடிக்கல் அமைக்கும் பொழுது அந்த மோடி சாட்சாத் விஸ்வாமித்திர முனி போல் நின்ற அந்த தோற்றம் மறக்க முடியாத தருணம்’

குடியுரிமை சட்டம் முதல், கொடுத்த பணம் மக்களுக்கு ஒழுங்காக செல்கின்றதா என்பது வரை அவரின் ஒவ்வொரு கண்காணிப்பும் மிக மிக அருமையான அணுகுமுறை, தேசத்திற்கான நன்முயற்சிகள் புதிய பொருளாதார கொள்கை, வேலை வாய்ப்பு கொள்கை, புதிய கல்வி கொள்கை என வருங்கால பாரதத்துக்கு, மாணவ சமுதாய மேன்மைக்கு மிகபெரும் அடிதளமிடுகின்றார் மோடி
வருங்கால இந்தியா நிச்சயம் அவரை கண்ணீரோடு வாழ்த்தும்.

இன்று இந்தியா ஓரளவு பாதுகாப்பான தேசமாகவும் மோடி மிக பலமான தலைவராகவும் அறியபடுகின்றார், இந்தியா அதன் பொற்கால வாசலில் நுழைந்திருக்கின்றதுமோடி என்பது சாதாரண பெயர் அல்ல, இத்தேசத்தின் பெருமையினை மீட்டெடுத்து நிலைக்க வைக்கும் வரலாறு ஊழலுக்கு அப்பாற்பட்டும், தனிபட்ட விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டும் தேசத்தை காக்கும் இரண்டாம் சாஸ்திரி மோடி
தன் குடும்பம் தன் வீடு என்றில்லாமல் நாட்டை நிரம்ப நேசிக்கும் இரண்டாம் காமராஜர் அந்த மோடி
முழுக்க மிக சரியான நிபுணர்களையும், பெரும் ஆற்றலார்களையும் தன்னுடன் வைத்து அவர்களுக்கு மிகபெரும் சுதந்திரமும் கொடுத்து கண்காணிப்பவர் மோடி.

இது இந்துமக்கள் அதிகம் வாழும் நாடு, ஆனால் இந்திய பிரதமர் யாரும் இந்து கோவிலுக்கு செல்லவும் மாட்டார்கள், அதிகம் அதை காட்டிகொள்ளவும் மாட்டார்கள் தேசத்தில் இந்து பிரதமராக தயக்கமின்றி எல்லா கோவில்களுக்கும் சென்று இப்பண்பாட்டை மீட்டெடுத்த முதல் பிரதமர் மோடி இந்து சமூகம் அதிகம் கொண்ட நாட்டின் பிரதமர் இதைத்தான் செய்ய வேண்டும், ஆனால் அப்படி ஒரு பிரதமருக்க்கு தேசம் கிட்டதட்ட 64 ஆண்டுகள் காத்திருந்தது. அது மோடியால் நிறைவேறிற்று.

இந்து பெரும்பான்மை ஆட்சியில் எல்லா மத இன மக்களும் பாதுகாப்பாய் அமைதியாய் வாழமுடியும் என காட்டியவர் மோடிதமிழை பேசிய முதல் பிரதமர் மோடி, தன் பேச்சுக்களிலெல்லாம் பாரதியா, திருகுறள் இன்னும் ராஜராஜ சோழனை எல்லாம் கொண்டாடிய முதல் பிரதமர் மோடி வேட்டி சட்டை அணிந்து நின்ற முதல் பிரதமர் மோடி, டெல்லிக்கும் தமிழருக்குமான இடைவெளியினை குறைத்து நின்றவர் மோடி அவர் காலத்தில்தான் இலங்கை படையினரின் துப்பாக்கி சூடு நின்றது, காவேரி சிக்கல் தீர்ந்தது, தமிழக ஆலய சிலைகளெல்லாம் வெளிநாட்டில் இருந்து சிக்கலின்றி வந்து சேர்ந்தது’

வரலாற்றிலே முதன் முறையாக தன் திட்டத்தில் நடந்த முறைகேட்டு பணத்தை ஒரு பிரதமர் வசூலிக்கின்றார் என்றால் அது மோடிதான் தமிழ்நாட்டின் மிக சிறந்த அதிகாரியான அமுதாவினை தன் அலுவலகத்தில் வைத்து கொண்டு தமிழ்நாட்டை தனி கவனத்தில் அவர் எடுத்திருப்பது ஒன்றும் புரிய ரகசியமானது அல்ல‌ இதை நேரு, இந்திரா, மன்மோகன் என யாரும் செய்யவில்லை, மோடி அதை மிக சரியாக செய்கின்றார் மோடி இந்நாட்டின் அரண், காலம் கொடுத்த கொடை, முன்னொரு காலத்தில் இங்கு பொற்கால ஆட்சி நடத்திய குப்தர்கள் சோழர்களின் மறுபிறப்பு.

ஏதோ ஒரு ரிஷியின் தொடர்ச்சியினையும் அவரில் காணமுடியும்மோடி என்றொரு அரண் மட்டும் இவ்வளவு வலுவாக எழும்பியிராவிட்டால் தேசம் மிகபெரும் சிக்கலையும் குழப்பத்தையும் சந்தித்து மீளா சிக்கலில் வீழ்ந்திருக்கும், அதை தடுத்து தேசம் காக்க வந்தவர் மோடிஇன்று உச்ச அதிகாரம் அவர் கையில் இருக்கின்றது, மிகபெரும் மக்கள் செல்வாக்கும் இருக்கின்றது ஆனால் ஜனநாயகத்தையும் அதன் மாண்பையும் காத்து நிற்கின்றார்.

தேவையற்ற பேச்சு என்றோ, வீண் ஆரவாரமோ விளம்பரமோ அவரிடம் நீங்கள் காணமுடியாது. பேச்சினை குறைத்து செயல்களில் மட்டும் கவனம் செலுத்துபவர் அவர்மோடி பத்திரிகையாளரை சந்திப்பதில்லை எனும் ஒருகுற்றசாட்டு உண்டு, வரலாற்றில் நேருவும் இந்திராவும் இன்னும் பலரும் பத்திரிகையாளரை அதிகம் சந்தித்ததில்லைபத்திரிகை என்பது விளம்பரம் தேடி சம்பாதிக்கும் தொழில், அவர்கள் பிழைப்புக்கு நம் கருத்துக்கள் ஏன் தவறாக திரிக்கபட வேண்டும் எனும் ஒரு ராஜதந்திரம் எல்லா பிரதமர்களிடமும் உண்டு மோடியிடமும் அது நிரம்ப உண்டு, ஆனால் தேச மக்களுடனும் இன்னும் பல தரப்பினருடனும் அவர் அனுதினமும் உரையாடி கொண்டேதான் இருக்கின்றார்,

வெற்றிபெறும் மாணவர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர் அழைத்து பேச தயங்குவதில்லை இதில் தமிழ்நாட்டு மாணவர்களும் உண்டுமோடி காலம் கொடுத்த கொடை, சுதந்திர இந்தியாவுக்கு புது வடிவம் கொடுத்தவர்பொருளாதார கொள்கை முதல் அணிசேரா கொள்கை வரை மாற்றி அமைத்தவர் அவரே, ரஷ்யா எனும் ஒற்றை நாட்டிடம் ஆயுத அடிமையாக இருந்த இந்தியாவினை அமெரிக்கா பக்கம் நெருங்க செய்து இருவருக்கும் இடையில் ராஜதந்திரமாக நாட்டுக்கு நலம் தேடி தரும் சாகசகாரர்அவரின் மேக் இன் இந்தியா திட்டமும், இந்தியா ஆயுத , அணுசக்தி ஏற்றுமதி நாடாக மாறும் எனும் கொள்கையும் வெற்றிபெற்று கொண்டிருக்கின்றன‌.

மோடியால் நாடு பலம் பெற்றது, எல்லைகள் காவல் பெற்றன, உலகெல்லாம் தனி மரியாதை இந்தியாவினை தேடி வந்திருக்கின்றது நிச்சயம் இந்திய வரலாற்றில் மாபெரும் முத்திரையினை பதித்து, புதிய இந்தியாவினை வடிவமைத்தவரில் மகா முக்கியமானவர் என பெயர் பெற்றுவிட்டார் மோடிஅவர் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் நாட்டுக்காக துடிக்கின்றது, நாட்டையே அவர் சுவாசிக்கின்றார், நாடு ஒன்றுக்காகவே அவர் வாழ்கின்றார்அவரின் ஒவ்வொரு அசைவும் நாட்டு நலனையே சொல்கின்றன, காற்று வீசும் திசையினை நாற்று சொல்வது போல் மோடி செல்லும் திசையெல்லாம் நாட்டுக்கு இந்நலன் என எளிதாக சொல்லலாம்.

அயோத்தி ராமனும் , கேதர்நாத் நாயகனும், தேசம் வாழ் தெய்வங்களும், சக்திமிகு அன்னையும், தென்னக முருகனும் எல்லோரும் அவரை ஆசீர்வதிக்கட்டும்.

#HBDதேசத்தலைவர்மோடி

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026
மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்
செய்திகள்

மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

January 20, 2026
Modi
இந்தியா

உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் மோடியின் “பாதுகாப்பு வியூகம்” – ஒரு முழுமையான பார்வை

January 19, 2026
கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
உலகம்

வங்கதேசத்தில் அடுத்த ஆட்சி யார் எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானித்த மோடி! உலக அரசியலில் புது அத்தியாயம்!

January 3, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

மோடி அரசே பிழையை திறுத்து.

May 16, 2020
தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

March 26, 2024
கேரள இந்துக்கள் வேறு தமிழக இந்துக்கள் வேறு ஸ்டாலினின் புது கண்ணோட்டம்! நெட்டிசன்கள் விளாசல்!

கேரள இந்துக்கள் வேறு தமிழக இந்துக்கள் வேறு ஸ்டாலினின் புது கண்ணோட்டம்! நெட்டிசன்கள் விளாசல்!

August 31, 2020

“மோடி அரசு அதானி மற்றும் அம்பானியுடையது.” என்னடா இது?

January 26, 2021

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!
  • “திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”
  • டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி
  • மணலூர்பேட்டை ஆற்றுதிருவிழாவில் நடைபெற்ற கோர சம்பவம்

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x