ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வ து உறுதியாகி விட்ட நிலையில் பிஜேபி
சார்பாக பதவி ஏற்க இருக்கும் அடுத்த முதல்வர் யார் என்கிற கேள்வி தான் இப்
பொழுது ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பேசப்படும் டாபிக்காக இருக்கிறது. முன்னாள் முதல்வர் வசந்திரா ராஜே சி ந்தியாவுக்கு நிச்சயமாக வாய்ப்புகள் இல்
லை என்று உறுதியான நிலையில் பிஜே பியின் தேர்வு சச்சின் பைலட்டா இல்லை
கஜேந்திர சிங் செகாவத்தா என்றே இரு க்க முடியும்.
இருவரில் யார் முதல்வராக வந்தாலும் பிஜேபிக்கு நல்லது தான் என்றாலும் சச்
சின் பைலட்டை விட கஜேந்திர சிங் செ காவத் முதல்வராக வருவது தான் சரியான தேர்வாக இருக்க முடியும்.ஒரு வே ளை சச்சின் பைலட் பிஜேபிக்கு வந்தாலு ம் நிச்சயமாக பிஜேபி அவரை முதல்வராக்க விரும்பாது.கஜேந்திர சிங் செகாவத்தையே முதல்வராக்க விரும்பும்.
அதற்கு காரணம் இருக்கிறது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அனைத்து கருத்துக்கணிப்புகளும் ராஜஸ்தானில் உள்ள 25 லோக்சபா தொகுதிகளில் 24 ஐ கைப்பற்றினாலும்ஜோத்பூரை மட்டும் கைப்பற்றவே முடியாது என்றே கூறியன.
ஏனென்றால் ஜோத்பூரில் ராஜஸ்தா முத ல்வர் அசோக்கெலாட்டின் மகன் வைபவ்
கெலாட் போட்டியிட்டார்.ஜோத்பூர் காங்கிஸ் கட்சிக்கு சாதகமான தொகுதி.அசோக் கெலாட் 5 முறை வெற்றி பெற்ற தொகுதிஅது மட்டுமல்ல இப்பொழுது அசோக்கெலாட் எம்ல்ஏவாக உள்ள சர்தார் புரா சட்டமன்ற தொகுதி கூட ஜோத்பூர் லோ க்சபா தொகுதியிலேயே அடங்கி உள்ளது
இந்த சர்தார்புரா சட்டமன்ற தொகுதியில் அசோக் கெலாட் தொடர்ந்து 5 முறை ஜெயித்து வருகிறார் என்றால் ஜோத்பூரி ல் அசோக் கெலாட்டின் செல்வாக்கை அறிந்து கொள்ளலாம். 2018 ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் ஜோத்பூர் லோக்ச பா தொகுதியில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 6 சட்டமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் தான் வெற்றி பெற்று இருந்தது.
இதனால் கஜேந்திர சிங் செகாவத் 2014 ல் மோடி அலையினால் ஜோத்பூரில் வெ ற்றி பெற்றது மாதிரி 2019 ல் வெற்றி பெற முடியாது எனவே அசோக் கெலாட்மகனிடம் தோல்வியடைவார் என்றே அரசியல் பார்வையாளர்கள் நினைத்தார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம் ராஜ்புத்கள் ராஜஸ்தானியேயே அதிகமாக இருப்பது ஜோத்பூர் லோக்சபா தொகுதிதான். இங்கு ராஜ்புத்கள் சுமார் 20 சதவீதம் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எதிராக உள்ள20 சதவீத தலித்கள் 15 சதவீத முஸ்லிம்கள் 15 சதவீதம் ஜாட்கள் 10 சதவீதம் உள்ள குஜ்ஜார்கள் மற்றும் மீனாக்கள் என்று காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான தொகுதி ஜோத்பூர்
அதனால் அசோக் கெலாட் தன்னுடைய சீமந்திர புத்திரன் வைபவ் கெலாட்டை ஜோத்பூரில் நிறுத்தி வெற்றி பெற வைத்து விடலாம் என்று கனவில் இருந்தார்.இன்னொரு முக்கியமான விசயம் அப்பொழுது ராஜபுத்திரர்கள் கூட வசந்திராராஜே சிந்தியா மீது உள்ள கோபத்தில்
பிஜேபிக்கு எதிராகவே இருந்தார்கள்.
அதனால் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட்டின் வெற்றி உறுதி என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.ஆ னால் அனைவரின் கணிப்பையும் பொய்யாக்கி கஜேந்திர சிங் செகாவத் சுமார்2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அசோக் கெலாட்டின் மகனை வீழ்த்தி அசோக் கெலாட்டுக்கு எதிராக கஜேந்திர சிங் செகாவத் 2019 லோக்சபா தேர்தலில் பெற்ற வெற்றி தான் கஜேந்திர சிங் செகாவத்தை தேசிய அளவில் பிரபலமாக்கி மத்திய அமைச்சர் பதவிக்கு கொண்டு வந்தது.
அதோடு அது வரை பிஜேபியின் ராஜபு த்திர முகமாக அறியப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரான துப்பாக்கி சுடும் வீரர் ராஜவர்தன் ரத்தோரை அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்தியது.இப்படிக்கும் 2019 லோக்சபா தேர்தலில் ஜெய்ப்பூர் ரூரல் லோக்சபா தொகுதியி ல் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்
மகத்தான வெற்றி பெற்று இருந்தார்.
ராஜவர்த ரத்தோரை பிஜேபி ஓரங்கட்டி வைத்து விட்டு கஜேந்திர சிங் செகாவத்தை பிஜேபி மத்திய அமைச்சராக கொண்டு வந்ததன் முக்கிய நோக்கமே ராஜபுத்திரர்களின் ஆதரவு இருந்தால் தான் பிஜேபியால் ராஜஸ்தான் அரசியலை தக்கவைக்க முடியும்.
அதற்கு பைரான்சிங் செகாவத் மாதிரி ஒரு அரசியல் சாணக்கியர் வேண்டும் என்று பிஜேபி நினைக்கிறது.அது ரத்தோரிடம் நிச்சயமாக இல்லை ஆனால் கஜேந்திர சிங் செகாவத்திடம் இருக்கிற து.ராஜஸ்தான் அரசியல் முன்னாள் முதல்வ ர்பைரான் சிங் செகாவத் இருக்கும் வரை பிஜேபியை ராஜபுத்திரர்களின் கட்சி என்றே அழைக்கப்பட்டது.
ஆனால் வசந்திரா ராஜே சிந்தியாவின் கைகளுக்கு ராஜஸ்தான் அரசியல் வந்த பிறகு அவரின் ஜாட் ஆதரவும் ராஜபுத்திர எதிர்ப்பும் ராஜபுத்திரர்கள் பிஜேபியிடம் இருந்து விலக வைத்தது.இதனால் தான் கடந்த 2018 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி
ராஜஸ்தானில் ஆட்சியை இழந்தது.
இதனால் ராஜஸ்தானை தொடர்ந்து பிஜேபி தக்க வைக்க ராஜபுத்திரர்களின் அடையாளமாக இப்பொழுது வலம் வரும் கஜேந்திர சிங் செகாவத் தையே பிஜேபி அடுத்த முதல்வராக்க விரும்புகிறது. இப்பொழுது நடைபெறும் ஆட்சி கவிழ்ப்பு கூட வசந்திரா ராஜே சிந்தியாவின் விரு ப்பம் இன்றி கஜேந்திர சிங் செகாவத் மூலமாகவே பிஜேபி நடத்தி வருகிறது.
ஆக ராஜஸ்தானில் பிஜேபி கஜேந்திர சிங் செகாவத் முதல்வராக்கி மீண்டும் ராஜபுத்திரர்களின் ஆதரவையும் சச்சின்பைலட் டை தனிக்கட்சி ஆரம்பிக்க வை த்து காங்கிரஸ் ஆதரவு நிலையில் உள் ள குஜ்ஜார்கள் மற்றும் மீனாக்களின் ஆதரவை காங்கிரசிடம் இருந்து விலக வைத் து ராஜஸ்தானை நீண்டகாலத்திற்கு பிஜேபி தக்க வைக்கும் என்றே நான் நினைக்கிறேன்.