நாங்குநேரியில் சாதி கொடுமையால் மாணவன் மற்றும் அவரின் தங்கை வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனிடையே அதே நாங்குநேரிபகுதியில் திமுக ஊராட்சி மன்ற கவுன்சிலர் படுகொலை செய்யப்ட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு தலைவிரித்தாடுகிறது என எதிர்கட்சிகளும் மக்களும் திமுக அரசின் மீது குற்றசாட்டுகளை வைத்து வந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பிரச்னை மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார் இரண்டு நாட்கள் கழித்து அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இது தொடர்பாக அனைத்து கட்சியினரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
பா.ஜ.க மாநில செயலாளர் Dr. SG சூர்யா நீட் தேர்வு குறித்து தனது சமூக வலைப்பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் கூறப்பட்டுளதாவது:
கடந்த 3 நாட்களாக #NEET தேர்வுகளை வைத்து தமிழகத்தில் செய்யப்படும் அரசியல் மிகவும் அபாயகரமாக உள்ளது. குறிப்பாக நீட்டுக்கு எதிராக சன் நியூஸ் தொலைகாட்சி செய்து வரும் பிரச்சாரமானது தமிழ் சமூகத்தில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தவிருக்கிறது.
ஒவ்வொரு வருடமும் 10-ஆம் வகுப்பு, +2 வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் போது பல பிஞ்சு மாணவர்கள் தேர்ச்சி பெற முடியவில்லை என மன உளைச்சலில் தற்கொலை செய்துக்கொள்கின்றனர். சமீப காலமாக மதுப்பழக்கத்தால் கொடுமைக்கு உள்ளாகும் பிஞ்சு குழந்தைகள் தற்கொலை செய்வது மட்டுமின்றி “மது விற்பனையை நிறுத்த வேண்டும், குடி பழக்கத்தினால் மேலும் எந்த உயிரும் பலியாக கூடாது, என் தந்தை குடி பழக்கத்தை நிறுத்த வேண்டும்!” என உருக்கமான கடிதங்களை எழுதி தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்டனர். அவை குறித்தெல்லாம் எந்த விவாதமும் ஏற்படுவதில்லை.
ஆனால், நீட் தேர்வு தற்கொலைகளை மட்டும் தொடர்ந்து செய்தியாக வெளியிட்டு நீட் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களையும், குறிப்பாக அவர்களின் பெற்றோர்களையும் கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளாக்குகின்றன தமிழக ஊடகங்கள். இவர்களுக்கு தமிழக மாணவர்கள் மீது அக்கறை என்றெல்லாம் தயவு செய்து தவறாக எண்ணி விடாதீர்கள், நீட் எதிர்ப்பு அரசியல் செய்து தி.மு.க-வின் ஊதுகுழலாக இருப்பது மட்டுமே இவர்களின் தலையாய கடமை.
தி.மு.க-வின் ஊதுகுழலாக செயல்பட நீட் தேர்வை விரோதியாக முன்னிறுத்தி அத்தேர்வுக்கு தயாராபவர்களை கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்குவது மட்டுமின்றி, நீட்டில் தோல்வி அடைந்தால் தற்கொலை ஒன்றே தீர்வு என்ற மனநிலைக்கு நம் இளைய சமுதாயத்தை தயார் செய்ய துவக்கியுள்ளன தமிழக ஊடகங்கள். இது மிகவும் அபாயகரமான, ஆரோக்கியமற்ற, அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல். தமிழர்கள் இவர்கள் செய்யும் கேடுகளை இனம் கண்டு கருவறுக்க வேண்டும் என்பதே நம் வேண்டுகோள்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இந்த சமுதாய சீர்கேடுகளை சரி செய்வோம்,அதுவரை தி.மு.க-விடம் சண்டை செய்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்;