மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஓரிரு நாளில் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக கூட்டணியும் ஏறத்தாழ இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. த.ம.கா தேவநாதன் கட்சி,ஐஜேகே, அமுமுக உள்ளிட்ட பல கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிவருகிறது
பாமக தலைவர் அன்புமணியை பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்கள் அதன் காரணமாக , அன்புமணி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பாஜக மேலிடத் தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சமத்துவ மக்கள் கட்சிதலைவர் சரத் குமார் இரு நாட்களுக்கு முன் சந்தித்தார். பாஜக – சமக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது நேற்றைய தினம் பாஜக குழுவினருடான சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், தற்போது மரியாதை நிமித்தமாக பா.ஜ.க குழுவினரை சந்தித்துள்ளதாகவும், தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் பாஜக மாநிலத்தலைவர அண்ணாமலை மற்றும் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அவர்கள் முன்னிலையில் தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்து பாஜகவில் இணைத்து கொண்டார். அரசியலில் இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. தமிழக பா.ஜ.க மேலும் மேலும் வலுப்பெற்றுவருவதால் தான் ஒரு கட்சியை பாஜகவில் இணைத்துள்ளார்கள். என அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் பல கட்சிகள் பாஜகவுடன் இணைப்பதற்கு தயாராக உள்ளார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜகவில் பல மாற்றங்கள் நிகழும்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார் அவ்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
இணைப்பு குறித்து பலரும் பல விதமாக சித்தரித்து வருவதால் தன்னிலை விளக்கம் அளிக்கிறேன்1996 ஆம் ஆண்டு அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்ததே எனது முதல் அரசியல் பயணம் தேர்தல் வரும் போதெல்லாம், யாருடன் கூட்டணி? எத்தனை இடங்கள் என்ற பேச்சே மேலோங்கி நிற்கிறது
கூட்டணி பேச்சுகளுக்கு மட்டும் தான் நாம் பயணிக்கிறோமா என்ற எண்ணம் என் அமைதியை இழக்க செய்தது “என் பயணத்தில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று பலர் பலவிதமாக பேசினாலும் அதற்கெல்லாம் கவலைப்படவில்லை”பிரதமர் மோடி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு பாஜகவுடன் உறுதுணையாக இருந்து ஏன் செயல்பட கூடாது என சிந்தித்தேன் 2026ல் இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பாஜக ஆட்சி அமைந்திட வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது எனது 28 ஆண்டு அரசியல் அனுபவத்தை தேச வளர்சிக்கு அர்ப்பணிப்பதற்காக, பாஜகவுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்தேன்” என அவ்வறிக்கையில் கூறியுள்ளார்.