சன் டிவி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா?ஆண்டிக்கு ஒரு நீதி அம்பலத்திற்கு ஒரு நீதியா.? இது தான் திமுகவின் சமூக நீதியா.?

உத்திர பிரதேசத்தில் முகமது ஜுபேர் என்பவர், “உத்தரபிரதேசத்தில் வயது முதிர்ந்த பாய் ஒருவரை ஜெய் ஶ்ரீராம் சொல்லச் சொல்லி சிலர் அவரை வற்புறுத்தி அடித்தனர். அவர் தாடியை வெட்டினர்” என ஒரு வீடியோ பகிர, அதை விசாரித்த உ.பி காவல்துறை, “அந்த முதியவர் பாய் தாயத்து விற்பவர்.

பியூஷுக்கு போன் செய்து நச்சுனுகேள்வி கேட்ட அண்ணாமலை Annamalai Bjp

அவரிடம் தாயத்து வாங்கியவர்கள், அந்த தாயத்தால் அவர்களுக்கு கெட்டது நடந்ததாக சொல்லி அவரை அடித்திருக்கிறார்கள். அடித்த நால்வரில் மூவர் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவரை ஜெய்ஶ்ரீராம் சொல்ல சொல்லவில்லை அவர்கள்” என்று கூறியுள்ளார்கள்.

கலவரம் தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பகிர்ந்த முகமது ஜுபேர் அந்த வீடியோவை மியூட் செய்து பகிர்ந்திருந்தார். ஒலியில்லா வீடியோவை பார்த்து பொங்கி ஆயிரக்கணக்கானோர் ரீட்வீட் செய்தனர். பல ஊடகங்ககளும் அதை காப்பி செய்து பகிர்ந்தனர். சன் டிவியும் அதை செய்தியாக வெளியிட்டது. உண்மைத்தன்மை ஆராயாமல் வெளியிட்டது.

Jagame Thanthiram Movie Review Dhanush karthik subbaraj

இது தொடர்பாக புதிய பாரதம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஷத்ரியன் வ.சிவாஜி முதல்வருக்கு ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அந்த கோரிக்கையானது இந்து,முஸ்லீம் கலவரத்தை தூண்ட முயற்சித்த சன் டிவி நிறுவனர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

உ.பி மாநிலத்தில் அபதுல் சமது சபீர் என்ற முஸ்லீம் பெரியவர் சக முஸ்லீம் அன்பர்களை ஏமாற்றியுள்ளார்.எமாற்றம் அடைந்த முஸ்லீம் இளைஞர்கள் சபீரை பிடித்து அடித்துள்ளனர் இச்சம்பவம் முஸ்லீம் முஸ்லீக்கும் நடந்தது.

ஆனால் தமிழகத்தில் சன் டிவி இந்து,முஸ்லீம் சண்டை போல் சித்தரித்து இந்து,முஸ்லீம் மக்களுக்கிடையே மோதலை உருவாக்கும் விதமாக செய்தி வெளியிட்டது.

எனவே இந்து,முஸ்லீம் கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட சன் டிவி நிர்வாகத்தை உடனே முடக்க வேண்டும்,சன் டிவி நிறுவனர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உடனடியாக கைது செய்ய வேண்டும்.! கிஷோர்,சிவசங்கர் பாபா மீது மட்டும் தான் உடனடியாக நடவடிக்கை பாயுமா.?ஏன் இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை பாயாதா.?

ஆண்டிக்கு ஒரு நீதி அம்பலத்திற்கு ஒரு நீதியா.?இது தான் திமுகாவின் சமூக நீதியா.?

Exit mobile version