கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்! பேசியதாவது ‘கடந்தாண்டு கொரோனா காரணமாக இந்து முன்னணியே சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி நடந்தது.
தற்போது கொரோனா குறைந்துள்ளது. பல மதங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பள்ளிகள் திறக்கப்படுகிறது. டாஸ்மாக் படு ஜோராக நடைபெறுகிறது. மக்கள் பாதிக்கப்படாமல் உரிய சமூக இடைவெளியுடன் இவ்விழாவை கொண்டாட எங்கள் மாநில நிர்வாக குழு முடிவு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க பதிவு செய்துள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆரம்பம் முதலே எதிர்ப்பை மீறிதான் இவ்விழாவை நடத்துகிறோம்.
தடையை மீறி விநாயகர் சதூர்த்தியை நடத்துவோம். பேப்பர் கூழ், கிழங்கு மாவு கொண்டு சிலைகளை தயாரிக்கிறோம் அதனால் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது நீர்நிலைகள் மாசுபடாது.
ஹிந்துக்களுக்கு விரோதமாக செயல்படவில்லை என்று தி.மு.க அரசு கூறுகிறது. அப்படியென்றால் விழாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். திமுக ஹிந்து விரோத அரசாக உள்ளது.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. திமுக அரசு சர்ச்சில் பெண்களை பாதிரியார்களாக பணி அமர்த்துவதற்கும், மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமா?
தமிழகத்தில் ஹிந்து கோவில்கள் மட்டும் இடிக்கப்படுகிறது. அதிகாரிகள் முதலமைச்சருக்கு தவறான தகவல் கொடுத்து திசை திருப்புகின்றனர்’ என கூறினர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















