ஒலிம்பிக்ஸில் நேற்றுவரை இந்தியா 1 வெள்ளி, 2 வென்கலம் என மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது. இனி நடக்கும் போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகமாக தென்படுகின்றது. ஹாக்கியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு அணிகளும் அவர்களது பிரிவு அரையிறுதியில் தோற்றுவிட்டன. அடுத்த ஆட்டம் வெண்கல பதக்கத்திற்கு நடக்கும் இதில் 3,4 ஆம் இடங்களை முடிவு செய்வார்கள், அதில் 3 இடம் பிடிக்கும் அணிக்கு மட்டுமே வெண்கலம் உண்டு.
நாளை இந்திய ஆண்கள் அணி 3 வது இடத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளது. வெற்றிபெற்றால் மேலும் ஒரு வெண்கலம் இந்தியாவிற்கு கிடைக்கும் ரவி தஹியா மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இறுதி போட்டி சென்றுள்ளதால் கட்டாயம் பதக்கம் உண்டு அது வெள்ளியா அல்லது தங்கமா என்பதை ரவி தஹியா முடிவு செய்ய வேண்டும் .முன்பு சுஷில் குமாருக்கு நடந்தது போல மோசமான சூழல் நிகழ்ந்து ஏமாற்றமடைந்தாலும் வெள்ளி உறுதி.
மல்யுத்தம் 86 கிலோ பிரிவில் தீபக் புனியா அரையிறுதியில் தோற்று ரெபச்சேஜ் சுற்றுக்காக காத்திருக்கிறார். அதில் ஒரே ஒரு ஆட்டம்தான், ஜெயித்தால் வெண்கலம். எதிர்த்து ஆட போகிறவர் ஏற்கனவே இன்னொரு ஆட்டம் ஆடி களைப்பாக வருவதால் இவர் ஜெயிக்க நிறைய வாய்ப்பு. இவர் வெண்கலம் ஜெயிக்க நிறைய வாய்ப்பு உண்டு.
அடுத்து வரபோகிற நாட்களில் பஜ்ரங் புனியா, வினேஷ் பொகட் என இரு நல்ல ஆட்டக்காரர்கள் மல்யுத்த போட்டியில் களமிறங்குவார்கள். அவர்கள் இருவருமே உலகத்தர ஆட்டக்காரர்கள், உலக சாம்பியன்ஷிப் ஆட்டக்களிலும் பதக்கம் வென்றவர்கள், கொஞ்சம் நன்றாக ஆடினால் இருவருமே பதக்கத்தை ஜெயிக்க வாய்ப்புகள் அதிகம்.
வினேஷ் பொகட் டங்கல் படத்தில் வரும் பிரபலமான பொகட் குடும்பத்தை சேர்ந்தவர், விளங்கும்படி சொன்னால் அமிர்கான் பாத்திரத்தின் சகோதரர் மகள். இவர்களில் குறைந்தபட்சம் ஒரே ஒரு வெண்கலமாவது வரும் என கணக்கிட்டு கொள்ளலாம்.
நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் நன்கு செயல்ப்பட்டு இறுதி போட்டி சென்றுள்ளார். இப்போது கணக்கிட்டால் ஏற்கனவே 1 வெள்ளி, 2 வெண்கலம் அதோடு:ரவிக்குமார் தஹியாவின் 1 வெள்ளி + தீபக் புனியாவின் 1 வெண்கலம் + பஜ்ரஜ் புனியா/வினேஷ் பொகட் இருவருக்கும் சேர்த்து 1 வெண்கலம்
ஆகியவைகளும் சேரும்.
மொத்தம் 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கம் வாங்கியிருப்போம்.. அப்படியானால் இது இந்தியாவின் சிறந்த ஒலிம்பிக்ஸில் ஒன்றாகிவிடும். இதற்கு முன் 2012 லண்டனில் இது போல் 2 வெள்ளி, 4 வெண்கலம் என 6 பதக்கம் வாங்கியுள்ளோம், அதுவே இதுவரையிலான சிறந்த செயல்பாடு, அதோடு இதுவும் சேரும்.
கொஞ்சம் அதிர்ஷ்டம் வேலை செய்து நாளை ரவி தஹியா 1 தங்கம் ஜெயித்து, ஹாக்கி இரு அணிகளும் 2 வென்கலம் ஜெயித்து, பஜ்ரங், வினேஷ் இருவரும் ஆளுக்கொரு வென்கலம் என 2 வெண்கலம் ஜெயித்து, ஈட்டி எறிதலில் சோப்ராவும் 1 வெண்கலம் ஜெயித்தால், மொத்தம் 1 தங்கம், 1 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கம் ஜெயித்திருப்போம். அது இதுவரையில் நடந்த எல்லா ஒலிம்பிக்ஸிலும் இந்தியாவின் சிறந்த பதக்க கணக்காக இருக்கும்.