ராஜஸ்தானில் அரசியல் குழப்பங்கள் நடந்தேறி வருகின்றது முதல்வர் அசோக் கெலாட்க்கும் சச்சின் பைலட்டிற்கும் சண்டை தீவிரமடைந்தது. இந்த நிலையில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் அசோக் கெலாட்க்கு எதிர்ப்பு நிலையை காட்டிவந்தார்கள். அரசியல் திருப்பமாக திடீரென சச்சின் பைலட் மீண்டும் ராகுல் காந்தியை சந்தித்தார்,இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி தொடரும் என்ற சூழல் நிலவி வருகிறது.
ஆனால் முதல்வர் அசோக் கெலாட்எம்.எல்.ஏ.க்களின் முகாமில் சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் மீணடும் காங்கிரஸ் கட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்றும் அவர்களுக்கு பதவி அளிக்க கூடாது என்று காங்கிரஸ் எம்எல்ஏ க்களிடையே புயல் வீசிக்கொண்டு இருப்ப தாகவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் ஜெய்ப்பூர் நிருபர் ராகேஷ் கோஷ்வாமி தெரிவிக்கிறார் வசந்திரா ராஜே சிந்தியா அசோக் கெலா ட் ஆட்சி கவிழக்கூடாது என்று பிஜேபி க்கு கட்டையை கொடுத்து வரும் வழியில் அசோக் கெலாட் முகாமில் சட்டையை கிழித்து கொண்டால் தான் ஆட்சி கவிழும் என்பதால் விரைவில் காங்கிரஸ் முகாமில் அடி தடிகளை எதிர்பார்க்கலாம்.
இப்பொழுது சச்சின் பைலட் காங்கிரசிடம் சரண்டர் ஆனது மாதிரி தெரியலாம்.இது ஒரு டிபன்ஸ் கேம் இந்த கேமின் முடிவில் அசோக் கெலாட் ஆட்சி கவிழ்வது உறுதி. இந்த கேமின்மூலமாக பிஜேபிக்கு நான்கு நன்மைகள் கிடைக்கும். ஒன்று வசந்திரா ராஜே சிந்தியாவை ஓரம் கட்ட முடியும். ஏனெனில் இப்பொ ழுது ஆட்சி கவிழ விடாமல் செய்வது வசந்திரா ராஜே சிந்தியாதான் என்று வசந்திரா ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பிஜேபி உணர்த்தி விட்டது.
இதனால்ஆளும் கட்சி கனவில் இருந்த அவருடைய ஆதரவாளர்களின் கனவை கலைத்த வசந்திராவுக்கு ஆதரவு குறைந்து விடும் இரண்டாவது ஆட்சி கவிழ்ந்து சச்சின் பைலட் பிஜேபிக்கு வந்தாலும் இந்த காங்கிரஸ் ரிடர்னால் எந்த முதல்வர் பதவி கிடைக்க வில்லை என்று காங்கிரசில் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினாரே அந்த முதல்வர் பதவியை பிஜேபியும் அளிக்காது என்று அவரை வைத்தே அவருடைய ஆதரவாளர்களு க்கு பிஜேபி அறிவிக்க முடியும்.
மூன்றாவது மகாராஸ்டிராவில் அஜித் பவார் மூலமாக பூசப்பட்டு நீண்ட நாட்களாக இருக்கும் கரியை துடைத்து விட்டு பதிலுக்கு சச்சின் பைலட் மூலமாக சோ னியா குடும்பத்திற்கு பூசப்படும் இந்த
கரியை அவர்களால் காலம் முழுவதும் மறக்க முடியாது. நான்காவதாக வசந்திரா சச்சின் பைலட் போன்ற டேஞ்சரான ஆட்களை முதல்வர் பதவியில் அமர்த்தாமல் கட்சி தலைமையின் பேச்சை கிளி பிள்ளை போல கேட்கும் கஜேந்திர சிங் செகாவத் மாதிரி ஆட்களை முதல்வர் பதவியில் அமர்த்தி ஒரு சிவராஜ் சிங் சௌகான் மாதிரி ஒரு மக்கள் முதல்வரை உருவாக்கி அவர் கைகளில் ராஜஸ்தான் ஆட்சி நீண்ட நாட்களுக்கு
இருக்க வைக்க முடியும்.
வலது சாரி எழுத்தாளர் : விஜய குமார்