சில நாட்களுக்கு முன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரைச் சேர்ந்த திமுக மாணவரணி நிர்வாகி சங்கர். இவர் காரைக்குடியில் பெண்கள் ஹாக்கி கிளப் நடத்தி வருகிறார். தனியார் பள்ளியில் பயின்று வரும் (15) வயது மாணவி மற்றும் அவரது சகோதரி (14) இருவரும் பயிற்சி பெற்று வந்தனர். இவ்விருவருக்கும் அண்மையில் சங்கர் பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
அந்த சிறுமிகள் தங்களின் பெற்றோர்களிடம் இதை பற்றி கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து அந்த பகுதி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து திமுக மாணவரணி அமைப்பாளர் சங்கரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் அருகே பொன்னுசாமி மகன் அஜித் இவர் திமுக ஐடி பிரிவு ஊராட்சி அமைப்பாளராக இருக்கிறார், இவர் கடந்த மாதம் மைனர் பெண்ணை கடத்திய தொடர்பாக வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார், இந்நிலையில் சில தினகளுக்கு முன் ஜாமினில் வெளிவந்த திமுக ஐடி பிரிவை சேர்ந்த அஜித்.
அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 17 வயது சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்தும், மேலும் தன்னுடன் இணைத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார், மேலும் அந்த பெண்ணுக்கு ஆபாச விடீயோக்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார், இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் தரப்பில் இருந்து அஜித்தை தட்டி கேட்ட போது அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் திமுக ஐடி பிரிவு நிர்வாகி அஜித்.
இதனை தொடர்ந்து அவர் மீது காவல்துறையில் புகார் கொடுக்க பட்டத்தை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், திமுக ஐடி பிரிவு நிர்வாகி அஜித் மீது போக்ஸோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய வழக்கின் கீழ் வேலூர் சிறையில் அடைத்தனர், பெண்கள் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் திமுக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக ஐடி பிரிவில் உள்ளவர் ஆபாசமாக புகைப்படங்களை சித்தரிப்பது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே போல் தான் அரசாங்கத்தை பற்றியும் பொய்யான செய்திகளை திமுக வெளியிடும் என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது
மேலும் 10 நாட்களுக்குள் திமுக நிர்வாகிகள் இருவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதால் ட்விட்டரில் #காமவெறி_ திமுக எனும் ஹாஷ்டாக்
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















