திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக நாட்டின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்ற பெயலில் பார்சல் வருவது வழக்கமாக இருந்துள்ளது. அண்டை நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடுவதில்லை. இந்த நிலையில் அவ்வாறு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளது. இந்த கடத்தலில் கேரளாவில் மக்கள் தொடர்பு அலுவலராக தூதரகத்தில் பணியாற்றி வந்த சரித் என்பவருக்கும் தொடர்பு உள்ளது.
மேலும் தூதரகத்தில் நிர்வாகச் செயலாளராக இருந்த ஸ்வப்னா என்பவரும் இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஸ்வப்னா கேரள அரசின் முதன்மை செயலர் மற்றும் தகவல் தொடர்பு துறைக்கும் செயலர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அரசின் முதன்மை செயலரிடம் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.இந்த கடத்தலில் பினராயி ஆட்சி கவிழும் நிலைக்கு சென்றுள்ளது. பெண்களால் ஆட்சி கவிழ்வது கேரளாவில் வழக்கம் ஆகிவிட்டது.
கேரளா அரசியலிலும் ஆட்சிகள் கவிழ்வதற்கும் முக்கிய பங்காற்றுபவர்கள் கேரளப் பெண்களே மேலும் கேரளா அரசு அதிகாரிகள் முதல் ஆட்சியாளர்கள் வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்க காரணமாக இருந்தவர்கள் கேரளா அழகிகளே. முன்பு காங்கிரஸ் முதல்வராக இருந்த உம்மன் சாண்டி ஆட்சியில் சோலார் பேனல் ஊழலில் முக்கிய பங்காற்றியவர் சரிதா நாயர் என்ற பெண் அதற்கு உம்மன் சாண்டியை எதிர்த்து தற்போது உள்ள கம்யூன்ஸ்ட்கள் தெருவில் இறங்கி போராடினார்கள்.
பாவம் உம்மன்சாண்டி ஒரளவுக்கு எளிமையானவர் மேலும் நல்லவரும் கூட சூழ்நிலையில் உம்மன் சாண்டி சிக்கிக் கொண்டார். ஆனால் இன்றைய கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி ஒரு கார்ப்ரேட் இவருக்கு பலவித தொழில்கள் உள்ளன இவரது மகள் ஒரு பெரிய தொழிலதிபர் கூட மேலும் கேரளா கம்யூனிஸ்ட் கட்சியில் சிறப்பாக பணியாற்றிய கவுரியம்மா அவர்களை முக்கியத்துவம் கொடுக்காமல் அவரை கட்சியில் இருந்து வெளியேற்றியது இந்த கும்பல்தான். மேலும் கேரளா முதல்வராக ஒரளவுக்கு சிறப்பாக பணியாற்றி அச்சுதானந்தம் அவர்களை வயது மூப்பு காரணம் காட்டி அவரை அரசியலில் இருந்து அகற்றியது இந்த பினராய் குருப். இவர்களுக்கு கம்யூனிஸ்ட் அதிகாரம் மையம் தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது பினராய் குற்றவாளி என்றால் கம்யூனிஸ்ட் மேலிடமும் குற்றவாளிகளே.
பெண்கள் விஷயத்தில் சிக்கித் தவிக்கும் பினராய் ஆட்சியை சிறப்பான ஆட்சி என்று குரல் கொடுத்த கோமாளி நடிகர் கமலஹாசன் இதற்காகத் தான் குரல் கொடுத்தாரோ.