இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்லாத முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இந்து சமய அறநிலை துறை சார்பில் அண்மையில் தொடங்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆசிரியர் மற்றும் பல்வேறு பணிகளுக்காக நடைபெறவிருக்கும் நேர்முகத்தேர்விற்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இந்து பண்டிகைக்கு வாழ்த்து கூட சொல்ல விரும்பாத முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் தொடங்கி உள்ள அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர், காவலர், அலுவலக உதவியாளர் துப்புரவு பணியாளர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள். வேலைக்கு சேர விரும்புவோர் வரும் 18ம் தேதி நேர்காணலில் நேரடியாக பங்கேற்கலாம்.
என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மேலும் இந்து சமய அறநிலையத்துறையின் வருமானத்தில் தொடங்கியுள்ள இந்த கல்லூரியில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது தமிழக அரசு ,
முதல்வருடைய சொந்தத்தொகுதியில் தொடங்கப்பட்ட அரசு கல்லூரியில் நடைபெறும் உருப்படியாக நடைபெற்ற உத்தரவு இதுதான் என்று கூறப்படுகிறது. சமத்துவம், சமூகநீதி என வாய்கிழியப்பேசி, பெரியார் வழியில் செயல்படுவதாகவும், மதச்சார்பற்ற ஆட்சி நடத்துவதாகவும் மார்தட்டும் திமுக அரசு தற்போது மெல்ல காவி கலருக்கு மாறி வருவது பா.ஜ.கவின் எழுச்சியே.