ஒரே நாளில் பஞ்சாயத்துகளில் 13,326 கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி ஆந்திர மாநில அரசு உலக சாதனை படைத்துள்ளது.
ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தலைமையில் தெலுங்கு தேசமும், நடிகர் மற்றும் அரசியல்வாதியுமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. பவன் கல்யாண் துணை முதல்வராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் பொறுப்பையும் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி 13,326 பஞ்சாயத்துகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அன்றைய நாளில் திட்டமிட்டவாறே கூட்டமும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு தற்போது உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
இதனை உலக சாதனைகளை அங்கீகரிக்கும் வோர்ல்டு ரெக்கார்ட்ஸ் யூனியன் மேலாளர் கிறிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் அங்கீகரித்து உள்ளார். அதற்கான சான்றிதழ், பதக்கத்தை துணை முதல்வர் பவன் கல்யாணிடம் வழங்கி இருக்கிறார்.
உலக சாதனை படைத்ததையும்,அதனை அங்கீகரித்து வழங்கப்பட்டு உள்ள சான்றிதழையும் துணை முதல்வர் பவன்கல்யாண் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார். இதனை 100 நாள்களுக்குள் அத்துறைக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதை அவரது ரசிகர்களும் அவரது கட்சித் தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.
Get real time update about this post categories directly on your device, subscribe now.
















