சிரியா சண்டை, சுலைமானி கொலை என மிகபெரும் போர்நெருக்கடி பதற்றம் தணிந்த நிலையில் இந்தியாவும் சீனாவும் முறுக்கி கொண்டு நிற்கின்றன
நல்ல வேளையாக அப்படியே நிற்கின்றன
இந்நிலையில் அசர்பைஜானும் ஆர்மேனியாவும் அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டன, இது இஸ்லாமிய கிறிஸ்தவ சிக்கலாக மாறி கொண்டிருப்பதுதான் அஞ்ச வைக்கின்றது
அசர்பைஜான் இஸ்லாமிய நாடு இதன் ஆதரவு துருக்கி, துருக்கி நேரடியாக களம் இறங்காமல் தன் நண்பன் பாகிஸ்தான் மற்றும் சிரியாவின் குழப்பமான தரப்புகளை சேர்த்து அசர்பைஜானில் களமிறங்குகின்றது
பாகிஸ்தானுக்கு தற்போது தோழமையில் இருக்கும் ஒரே ஒரு இஸ்லாமிய நாடு துருக்கி என்பதால் வேறு வழிதெரியவில்லை
பாகிஸ்தானில் எப்பொழுதும் ஒரு வெட்டி தீவிரவாத கூட்டம் குட்டி சாத்தான் போல் தயாராக இருக்கும், உரிய வேலை கொடுக்காவிட்டால் அது பாகிஸ்தான் தலையிலே ஏறி இருந்து ஆடும்
அந்த குட்டிசாத்தான்களை இந்தியா ஆப்கன் என எங்காவது அனுப்பிவிடும் பாகிஸ்தான் இப்பொழுது நிலமை சரியில்லாததால் சிக்கலில் இருந்தது, காரணம் அந்த குட்டி சாத்தான்கள் பாகிஸ்தானுக்கு படியளக்கும் சீன நிறுவணம் மேலே பாய தயாராக இருந்தன
இதனால் துருக்கி கையில் அவைகளை கொடுத்து “தயவு செய்து இவைகளை அசர்பைஜானிலே புதைத்து விடு”என சொல்லி அனுப்பிவிட்டது
பாகிஸ்தான் தயாரிப்பு தீவிரவாதிகள் கொஞ்சம் தரமானவர்கள் என்பதால் அவர்களையும் சிரிய போராளிகள் சிலரையும் களத்தில் இறக்கியிருகின்றது துருக்கி
நிலமையினை கவனித்த ரஷ்யா ஆர்மீனியா பக்கம் சரிகின்றது. செசன்யா தொடங்கி பல இடங்களில் இப்படி தீவிரவாதிகளை போட்டு அடித்த ரஷ்யா இப்பொழுது மிக எளிதாக ஆர்மேனியாவில் நிற்கின்றது
நிலமை சரியில்லை என்றால் நேரடியாக களமிறங்குவோம் என ரஷ்யா எச்சரிக்க துருக்கியும் பதிலுக்கு முறைக்கின்றது
இது இப்படியே நீடித்தால் இரு அணியாக சேர்ந்து சண்டையிட்டால் அது பெரும் விவகாரமாக வெடிக்கலாம்
காரணம் அப்பக்கம் ஈரான் முதல் பல சிக்கல்கள் இருப்பதால், ஆர்மீனியாவுக்கு அடுத்த ஜார்ஜியாவில் இஸ்ரேலிய நடமாட்டம் ஜாஸ்தி என்பதால் விஷயம் ஒருமாதிரி சீரியசாகவே செல்கின்றது
விஷயத்தை இன்னும் சீரியசாக்க கிரீஸில் அமெரிக்க முகாம் வருகின்றது, ஆம் அவர்களுக்கு துருக்கியுடன் முன்பு நல்லுறவு இருந்தது அதனால் அமெரிக்க முகாமும் இருந்தது
இப்பொழுது துருக்கியினை காலி செய்து கிரீஸில் கால் வைக்க முடிவு செய்துவிட்டது அமெரிக்கா, இது காலமும் துருக்கிக்கு அந்த முகாம் ஒரு காவல் அது இனி இருக்காது
சீனா போல சுற்றியுள்ள நாடுகளுடன் பெரும் தகறாறு செய்யும் துருக்கிக்கு இனி நேரம் சரியில்லை என்பது மட்டும் தெரிகின்றது