யெஸ் பேங்கில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வந்தவர்கள் தொடர்ச்சியாக விலகிச் சென்றிருக்கின்றனர். கடந்த 8 மாதங்களில் குறைந்தது 3 முதலீட்டாளர்கள் இவ்வாறு விலக, அரசும் ரிசர்வ் வங்கியும் காரணத்தை ஆராய…
ஒவ்வொரு முதலீட்டாளரையும் தன் ஆட்களை வைத்து கலைத்து விட்டிருக்கிறார் ரானா கபூர் என்று தெரிந்து கொண்டார்கள்.
இதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முடிவெடுத்த அரசு – ரிசர்வ் வங்கி, மேலும் சில முதலீட்டாளர்களிடம் பேசி வருவதாக ரானா கபூர் காதுகளில் படுமாறு புரளி ஒன்றை கிளப்ப, அந்த முதலீட்டாளரையும் கலைத்து விட – அது வரை லண்டனில் இருந்த ரானா கபூர் – இந்தியா வந்தார்.
இந்தியா வந்த அவரை அரசு அமைப்புகள் வேவு பார்க்க துவன்கின. அவரை வேவு பார்க்க அவரது காவலாளிகள் உதவியுள்ளனர்.
வாராக்கடன் தொகைகளால் அவதிப்பட்ட யெஸ் பேங்கை ரிசர்வ் வங்கி எடுத்துக் கொள்ள அறிவித்த கையோடு, ரானா கபூரையும் கைது செய்ய முடிவு செய்தது.
ரானா கபூர் யெஸ் பேங்க் மூலம் டி ஹெச் எஃப் எல் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு – அவை திரும்ப தரப்போவதில்லை என்று தெரிந்தும் – கடன் தர, கடன் பெற்ற நிறுவனங்கள் அந்த ‘கடனுக்கான’ கமிஷனை லஞ்சமாக ரானா கபூர், கபூர் மனைவி மற்றும் 3 மகள்களை கொண்டு நடத்தி வந்த நிறுவனத்தில் செலுத்தி வந்திருக்கின்றனர்.
அதை கையிலெடுத்த அமலாக்க பிரிவு ரானா கபூரை – மீண்டும் லண்டன் சென்று விடாமல் – கைது செய்தது.
அவரது குடும்பத்தினருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விட்டிருந்தது அமலாக்க பிரிவு. அது தெரியாமல் லண்டன் தப்பி ஓட முயன்ற ரானா கபூரின் மகள்களில் ஒருவர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இவர்கள் மீது சிபிஐயும் இப்போது வழக்கு பதிவு செய்துள்ளது.
யெஸ் பேங்கை சுரண்டி சீரழித்தது போதாதென்று, அதை மீண்டும் சரி செய்ய முயன்ற அரசின் முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போட்ட ரானா கபூரை லண்டனிலிருந்து இந்தியா வரவழைத்து கைது செய்துள்ளது அரசு. சிறப்பு!
- நீரவ் மோடியின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. எப்போது நாடு கடத்தப்படுவாரோ தெரியவில்லை.
- இந்தியா திருப்பி அனுப்ப சொல்லி வந்த தீர்ப்பை எதிர்த்து விஜய் மல்லய்யா மேல் முறையீடு தீர்ப்பு இன்னும் வரவில்லை.
Why did he return from UK? Why did govt move now? An inside account of the drama
In one case, RBI had even told a marquee investor that it could deposit money in an escrow account. “Every time things appeared to be heading towards finality, his people would meet the potential investors and probably talk them out of it,” a top government source told TOI.