Wednesday, March 11, 2026
oredesam
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா
No Result
View All Result
OREDESAM
No Result
View All Result
Home இந்தியா

யோகி அரசு அதிரடி வன்முறையாளர்கள் இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள் !

Oredesam by Oredesam
June 14, 2022
in இந்தியா, செய்திகள்
0
யோகி அரசு அதிரடி வன்முறையாளர்கள் இதுவரை 316 பேர் கைது; புல்டோசரால் குறி வைக்கப்படும் வீடுகள் !
FacebookTwitterWhatsappTelegram

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா மற்றும் முன்னாள் ஊடகப் பொறுப்பாளர் நவீன் ஜிண்டால் ஆகியோரின் நபிக்கு எதிரான கருத்தை கண்டித்தும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக தலைவர்களான நுபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் இருவரையும் கைது செய்யக் கோரி ஜூன் 10 வெள்ளிக்கிழமை அன்று தொழுகைக்குப் பிறகு நாடு முழுவதும் பல நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அமைதியாக தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. உ.பி.யில் எட்டு மாவட்டங்களில் வெடித்த வன்முறை போராட்டங்களை அடுத்து, அங்கு நடந்த வன்முறைகள் தொடர்பாக உத்தரபிரதேச காவல்துறை மொத்தம் 13 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13 எப்ஐஆர்கள் பதிவு – 316 பேர் கைது:
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை மாலை காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் (சட்டம்-ஒழுங்கு) பிரசாந்த் குமார் வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தின் 8 மாவட்டங்களில் இருந்து 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் இது தொடர்பாக 9 மாவட்டங்களில் 13 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.

READ ALSO

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

மாவட்ட வாரியாக விவரங்களை அளித்த குமார், “அலகாபாத்தில் 92 பேர், சஹரன்பூரில் 79 பேர், ஹத்ராஸில் 51 பேர், அம்பேத்கர் நகரில் 34 பேர், மொராதாபாத்தில் 35 பேர், ஃபிரோசாபாத்தில் 15 பேர், அலிகாரில் 6 பேர், ஜலானில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்..

அதேபோல மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆர்களின் விவரங்களை அளித்த குமார், அலகாபாத் மற்றும் சஹரன்பூரில் தலா மூன்று எஃப்ஐஆர்களும், ஃபிரோசாபாத், அலிகார், ஹத்ராஸ், மொராதாபாத், அம்பேத்கர்நகர், கெரி மற்றும் ஜலான் ஆகிய இடங்களில் தலா ஒரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 316 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

போலீசார் காயம்:
மொரதாபாத்தில் இரண்டு காவலர்கள், அம்பேத்கர் நகரில் 8 போலீசார் மற்றும் அலகாபாத்தில் 3 போலீசார் மற்றும் பிற நிர்வாக அதிகாரிகள் உட்பட மொத்தம் 13 போலீசார் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறையில் காயமடைந்ததாகவும் ஏடிஜி கூறினார்.

வாகனங்கள் தீ வைக்கப்பட்டது:
இந்த போராட்டத்தின் போது, ​​சஹாரன்பூரில் பொதுமக்களின் இரண்டு வாகனங்கள் சேதமடைந்ததாகவும், அலகாபாத்தில் ஆறு வாகனங்கள் (நான்கு மோட்டார் சைக்கிள்கள், ஒரு பிஏசி டிரக் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள்) சேதமடைந்ததாகவும், இதில், ஐந்து வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், மூன்று வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் பிரசாந்த் குமார் கூறினார். 

கடும் நடவடிக்கை எடுங்கள் -முதல்வர் உத்தரவு:
ஜூன் 3-ம் தேதி கான்பூர் மாவட்டத்தில் நடந்த வன்முறை மற்றும் ஜூன் 10-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பல்வேறு மாவட்டங்களில் தொழுகைக்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை குறித்து கேட்டறிந்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சமூகவிரோத சிந்தனை கொண்ட அனைவருக்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைய வேண்டும் என்றும், இனி எவரும் மாநில அமைதியை கெடுக்க நினைக்க கூடாது எனத் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத் சனிக்கிழமையன்று மாவட்ட நீதிபதிகள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மூத்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உயர் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்தார்.

கடந்த காலங்களில் கான்பூர், அலகாபாத், சஹரன்பூர், மொராதாபாத், ஹத்ராஸ், ஃபிரோசாபாத், அம்பேத்கர் நகர் போன்ற மாவட்டங்களில் சமூக விரோதிகளால் அமைதி மற்றும் நல்லிணக்க சூழலை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

புல்டோசர் மூலம் வீடுகள் இடிப்பு:
இதற்கிடையில், ஜூன் 10 அன்று சஹாரன்பூரில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இருவரின் வீடுகள் சனிக்கிழமை புல்டோசர்களைக் கொண்டு காவல்துறையினரால் இடித்துத் தள்ளப்பட்டன. மறுபுறம், கான்பூரில், முகமது இஷ்தியாக்கின் வீட்டையும் போலீசார் இடித்துள்ளனர். ஜூன் 3ஆம் தேதி கான்பூரில் நடந்த வன்முறைப் போராட்டங்களில் முக்கிய குற்றவாளியான ஜாபர் ஹயாத் ஹஷ்மிக்கு இஷ்தியாக் தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். 

இந்த வரிசையில், ஞாயிற்றுக்கிழமை, பிரயாக்ராஜ் நிர்வாகம் மாணவர் சமூக ஆர்வலர் மாணவர் அஃப்ரீன் பாத்திமாவின் வீடும் சட்டவிரோதமாக கட்டப்பட்டு உள்ளதாக அறிவித்தது. சனிக்கிழமை இரவு அஃப்ரீன் பாத்திமாவுக்கு ஒரு நோட்டீசை அனுப்பியது. அதில் ஞாயிற்றுக்கிழமை காலை அவரது வீட்டை இடிக்க இருப்பதாகவும், எனவே, வீட்டை காலி செய்யும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று புல்டோசர் கொண்டு அவரது வீடு முழுவதும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

ShareTweetSendShare

Get real time update about this post categories directly on your device, subscribe now.

Unsubscribe

Related Posts

கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி சொன்ன முக்கிய வார்த்தை.
செய்திகள்

போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!

March 5, 2026
வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.
இந்தியா

வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

February 20, 2026
Annamalai
செய்திகள்

பள்ளி மாணவர்களிடம் கஞ்சா ! கஞ்சா வியாபாரிகளுக்கு பதவி தரும் திமுக அண்ணாமலை ஆவேசம்.

February 4, 2026
மோடி
உலகம்

அமெரிக்கா கருவூலம் நடுங்க… லண்டன் வங்கி அதிர! தங்கத்தை மீட்ட மோடி – இது மோடியின் பதிலடி!

January 20, 2026
தெலுங்கானாவில் கால் பாதிக்கும் பா.ஜ.க! தென்னிந்தியாவை நோக்கி படையெடுக்கும் பா.ஜ.க !
செய்திகள்

“திராவிட கோட்டையில் விழுந்த ஓட்டை : அமித்ஷாவின் ஸ்கெட்ச்… திருப்பரங்குன்றம் தீர்ப்பும்… திசைமாறும் தமிழக அரசியலும்!”

January 20, 2026
IND vs US
இந்தியா

டிரம்பின் அழுத்தத்திற்குப் பணியாத இந்தியா: வல்லரசை மண்டியிடச் செய்த மௌனமான வர்த்தகப் போர்” சொல்லி அடித்த மோடி

January 20, 2026

POPULAR NEWS

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

நடிகர் சூர்யா கொடுத்த ஒரு கோடி இருளர் சமுதாயத்திற்கு இல்லை! மிஷினரிகளுக்கு! அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் அஸ்வத்தாமன்!

November 7, 2021
ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது  ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

ஷாருக்கானின் மகன் ஆர்யன்கானுக்கு கிடைத்தது ஜாமீன்! ஆசிய வரலாற்றிலேயே ஒரே இடத்தில் பிடிபட்ட 6 கோடி போதை மாத்திரைகள்!

October 29, 2021
தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

தேசத்தையும் தேவர் ஐயாவையும் இழிவுபடுத்தினாரா விஜய் சேதுபதி! விமான நிலையத்தில் உதை வாங்கிய காரணம் வெளியானது!

November 7, 2021
சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

சினிமாவில் ட்ரெண்ட் கிருஸ்துவ, இஸ்லாம் மதங்களை தவறாக பேசக்கூடாது.. இப்படி சம்பாதிப்பது கேவலம் இயக்குனர் ஆவேசம்! வைரல் வீடியோ!

November 11, 2021
ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

ஜாதி வெறி பிடித்த நடிகர் சூர்யா குடும்பம்!விமானத்தில் தனக்கு நடந்த உண்மை சம்பவத்தை வெளியிட்ட தலித் தலைவர்! வைரல் வீடியோ!

November 2, 2021

EDITOR'S PICK

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர்  உயிரிழப்பு!

தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பா.ஜ.க தலைவர், ஷேக் வாசிம் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

July 9, 2020
மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

February 27, 2020
ராமேஸ்வரத்தில் 108 அடி உயரத்தில் அமையும் ஹனுமான் சிலை.

ராமேஸ்வரத்தில் 108 அடி உயரத்தில் அமையும் ஹனுமான் சிலை.

February 25, 2022
செம ட்விஸ்ட்.. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக அபார வெற்றி.. சறுக்கிய ஆம் ஆத்மி.. திடீர் திருப்பம்

செம ட்விஸ்ட்.. சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக அபார வெற்றி.. சறுக்கிய ஆம் ஆத்மி.. திடீர் திருப்பம்

January 9, 2022

Archives

Follow us

Categories

  • அரசியல்
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கொரோனா -CoronaVirus
  • சினிமா
  • செய்திகள்
  • சேமிப்பு
  • தமிழகம்
  • மற்றவைகள்
  • மாவட்டம்
  • ராசிபலன்
  • விளையாட்டு

Recent Posts

  • BREAKING || த.வெ.க-வின் தேர்தல் வாக்குறுதிகள்.. அனல் பறக்க அறிவித்தார் விஜய்..!
  • போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் 48 மணி நேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி போனில் பேச்சு..!
  • தமிழக வெற்றிக் கழகத்துடன்(TVK) இனி யார் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது..?
  • வருங்கால தமிழக அரசியலில் மாற்றம் தரும் தலைவர் யார்..? உங்கள் கருத்து.

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

No Result
View All Result
  • Home
  • செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
  • உலகம்
  • அரசியல்
  • விளையாட்டு
  • ஆன்மிகம்
  • சினிமா

© 2020 oredesam - All Rights Reserved By vgts.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
x